சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
நடிகர் ஜீவாவின் அண்ணன் ரமேஷ். ‛ஜித்தன்' படத்தின் மூலம் அறிமுகமானதால் ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்படுகிறார். அதன் பிறகு பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவருக்கென்று தனி இடம் கிடைக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மிரட்சி என்ற படத்தின் மூலம் நடித்துள்ளார். ஹீனா சகா என்ற புதுமுகம் ஹீரோயின், ராஜன் தயாரித்துள்ளார். எம்.வி.கிருஷ்ணா இயக்கி உள்ளார். ஆனந்த் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு ஜித்தன் ரமேஷ் பேசியதாவது: இந்த விழாவிற்கு நிறைய நடிகர்கள், நண்பர்களை கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால் பிஸி காரணமாக வரவில்லை. என் தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான் கூப்பிட்டேன். வந்துவிட்டார் அவருக்கு நன்றி. இந்தப் படத்தில் என்னை ஹீரோவாக நடிக்கத்தான் கேட்டார்கள். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ராஜன் இப்படத்தை பெரிய படமாக மாற்றி விட்டார். என்றார்
ஜீவா பேசியதாவது: யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் திறமையும் ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும்.
முன்பெல்லாம் ஆடியன்ஸ் வெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்திபடுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். என்றார்.