மீண்டும் கைகோர்க்கும் லவ் ஆக்சன் டிராமா கூட்டணி | 5 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தாண்டு வெளியாகும் ‛ஆடுஜீவிதம்' | பிரபல பின்னணி பாடகரின் தந்தை வீட்டில் 72 லட்சம் திருட்டு | மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி |
பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் மருதுகாசி. 250க்கும் மேற்பட்ட படங்களில் 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். நீல வண்ண கண்ணா வாடா (மங்கையர் திலகம்), சத்தியமே லட்சியமாய் கொள்ளடா (நீலமலை திருடன்), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்ல.. (பிள்ளைகனி அமுது) உள்ளிட்ட பல காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர்.
திருச்சி மாவட்டம் மேலகுடிகாடு கிராமத்தில் 1920ம் ஆண்டு பிப்ரவரி 13ந் தேதி பிறந்த மருதுகாசிக்கு வருகிற 13ந் தேதி நூற்றாண்டு தொடங்குகிறது. மருதுகாசியின் நூற்றாண்டு விழாவை அவரது குடும்பத்தினர் அவர் பிறந்த தினமான பிப்ரவரி 13ந் தேதி பிரமாண்டமாக கொண்டாடுகிறார்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்த விழாவிற்கு புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து தலைமை தாங்குகிறார். கவிஞர் பிறைசூடன், மருதகாசியின் படத்தை திறந்து வைக்கிறார். சிறப்பு மலரை கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக் கொள்கிறார். விழாவில் மருதகாசியுடன் பணியாற்றிய கலைஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.