'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர் பிரமோஷன் என்ற ஒரு புது பொய்யான யுக்தி கையாளப்பட்டு வருகிறது. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள் டுவிட்டரில் டிரெண்டிங் வந்தால் தான் தங்களுக்கு மதிப்பு என நினைக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்றால் போல் பல பொய்யான பாலோயர்களை உருவாக்கி தங்களையும் முன்னணியில் காட்டிக் கொள்ள சிலர் முயற்சித்தார்கள்.
அப்படிப்பட்டவர்களைத் தேடிப் பிடித்து பிரமோஷன் செய்து வைக்க சில தனிப்பட்டவர்களும் தங்களை ஏஜென்சிகள் என சொல்லிக் கொண்டு டிஜிட்டல் பிரமோஷன் என்ற அடையாளத்துடன் சில தயாரிப்பாளர்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். படம் வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே படம் சூப்பர் ஹிட், 5/5 ஸ்டார் என்றெல்லாம் கொடுப்பார்கள். மறுநாள், முதல் நாளிலேயே 50 கோடி வசூல் என பொய்யான வசூல் கணக்குகளை அள்ளி விடுவார்கள். அவர்களை அப்படி போடச் சொல்வதே சில தயாரிப்பாளர்கள் தான் என்பது வேறு கதை.
ரசிகர்களிடத்தில் படம் வெற்றி என பொய்யான ஒரு கருத்தை விதைப்பதற்கான முயற்சி அது. ஏமாறும் ரசிகர்களும் படம் நன்றாக இருக்கும் என நினைத்து தியேட்டர்களுக்குப் போய் படத்தைப் பார்த்து ஏமாந்து போவார்கள்.
இப்படியான பொய் வசூல் கணக்குகளை அள்ளிவிட்டதன் பலனாகத்தான் 'பிகில்' படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும், அந்தப் படத்தில் நடித்த விஜய்யும் வருமான வரித் துறையிடம் சிக்கியுள்ளார்கள் என தயாரிப்பாளர்கள் சிலர் சொல்கிறார்கள்.
இனி, டுவிட்டர் தளத்தில் பொய்யான தகவல்களைப் பதிவிடுபவர்கள், அவர்களுக்கு பொய்யான தகவல்களை அளிக்கும் சில டிஜிட்டல் ஏஜென்சிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.
சில லட்சங்கள் செலவு செய்து அப்படி பொய்யாக விளம்பரபடுத்தி இப்போது சிக்கலில் சிக்குவது தேவைதானா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். சிலர் இப்படியான பொய்த் தகவல்களை அளித்து தான் தங்களை டிராக்கர்கள் என அழைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை சினிமாவில் இருந்தே ஒதுக்க வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் காட்டமாகக் கூறுகிறார்கள்.