Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாவிக்கு முதல் மரியாதையா? : சீமானை காய்ச்சி எடுத்த விஜயலட்சுமி

08 பிப், 2020 - 19:50 IST
எழுத்தின் அளவு:
Vijayalakshmi-slams-seeman-workship-at-Tanjore-temple

விஜய், சூர்யா நடித்த ‛பிரெண்ட்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது மீண்டும் சீமானை வசைப்பாடி உள்ளார்.

சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கடவுள் மறுப்பு கொள்கையாளரான சீமான் அங்கு வழிபாடு நடத்தி உள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைலரான நிலையில் இதுகுறித்து விஜயலட்சுமி கூறியதாவது:

‛‛தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் சீமான் வழிபாடு நடத்தி உள்ளார். அவருக்கு முதல் மரியாதை வழங்கி உள்ளனர். இதை விட பெரிய அசிங்கம் எதுவும் இல்லை. லிங்க வழிபாடு பற்றி அசிங்கமாக விமர்சித்தவர் சீமான். அது என்ன என்றே தெரியாமல் பெண்கள் அதன் மீது பால் ஊற்றுகிறார்கள் என விமர்சித்தார். வாக்கில் சுத்தம் இருக்கணும். ஈ.வெ.ராவை பற்றி பேசுகிறுகீர்கள் என்றால் அதை பின்பற்ற வேண்டும். கடவுள் இல்லை என்று சொன்ன நீங்கள், திடீரென முருகன் என் பாட்டன் என்கிறீர்கள். அவர் எப்படி உங்களுக்கு பாட்டான் ஆனார். ஈவெராவின் மகன் அல்ல முருகன், சிவபெருமானின் மகன் முருகன். ஏன் இப்படி மெண்டல் மாதிரி உளறுகிறீர்கள்.

என்னை உங்களுக்கு நியாபகம் உள்ளதா. என் பெயர் விஜயலட்சுமி. என்னை யார் என்றே தெரியாது என்றீர்கள். ‛வாழ்த்துக்கள்' படத்தில் நடிக்க வந்தபோது எங்கள் வீட்டில் இருந்த சிவலிங்கத்தையும், நான் நெற்றியில் இட்ட தீருநீறு பட்டையையும் கிண்டல் செய்தீர்கள். இப்போது நீங்கள் எதற்கு பட்டை அடித்து போனீர்கள். வடிவேலுவை உங்கள் காமெடி செம்ம. சிவன் தான் என் ஆத்மா. அவர் மீது சத்தியம் செய்கிறேன். என்னை நீங்கள் நிறைய துன்படுத்தினீர்கள். எங்கே உங்கள் பையன் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள், என்னை உங்களுக்கு தெரியாது என்று.

அசிங்கமாக இல்லை உங்களுக்கு.. இதைவிட உங்களுக்கு அசிங்கமான பொழைப்பு இல்லையா. ஈ.வெ.ரா என்று சொன்னால் அவர் பின்னால் தில்லாக நில்லுங்கள். கோயிலுக்கு எதுக்கு போறீங்க. இந்துக்களை ஏமாற்றவா. ஆபாசமான இடத்திற்கு நீங்கள் ஏன் போகிறீர்கள். தஞ்சாவூர் கோயிலில் இருப்பவர்கள், இப்படி ஒரு பாவிக்கு மரியாதை கொடுத்து இருக்கிறீர்களே. சிவபெருமானை பற்றி இவர் பேசிய உங்களுக்கு தெரியாதா. இது அநியாயமாக தெரியவில்லையா.

மதுரை மீனாட்சி கோயிலுக்கு போய் வந்தபோது நீங்கள் என்னை எப்படி துன்படுத்தினீர்கள் தெரியுமா. ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தவனை, சிவன் முன் வைத்து மரியாதை செலுத்தி உள்ளீர்கள். எத்தனை பெண்களை நீங்கள் அழ வைத்துள்ளீர்கள். எல்லா தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தார்கள் கொரானா வைரஸ் வந்து கஷ்டப்படுகிறார்கள். அடுத்து சீமானை பிரகதீஸ்வரர் கோயிலில் அனுமதித்துள்ளீர்கள் என் நடக்க போகிறதோ? சாமியை மதிப்பவர்கள் மட்டும் தான் கோயிலுக்கு செல்ல வேண்டும். சீமானுக்கு மானம், மரியாதை இல்லை என தைரியமாக சொல்வேன்.

என்னை மன்னித்து விடுங்கள். சிவனை கும்பிட்டேன் என்ற காரணத்திற்காக சீமானால் நான் நிறைய அவமானப்படுத்தப்பட்டேன். இப்போது அவர் கோயிலுக்கு போனது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் தான் இப்படி பேசினேன்.

இவ்வாறு விஜயலட்சுமி பேசி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (81) கருத்தைப் பதிவு செய்ய
பின்னணி பாடகரான ரோபோ சங்கர்பின்னணி பாடகரான ரோபோ சங்கர் சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் சமந்தா சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (81)

ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
14 பிப், 2020 - 14:54 Report Abuse
ராஜவேலு ஏழுமலை உன்னை எவ்வளவு எதிர்கிறார்களோ அந்த அளவு நீ வலிமையானவன் என்பது பொருள்.
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
14 பிப், 2020 - 11:59 Report Abuse
narayanan iyer நானும் சீமான் இந்துத்துவாவை ஏற்றுக்கொண்டார் என்றுதான் நினைத்தேன் . நேற்று ஒரு வீடியோவை பார்த்தேன் அதில் கிறிஸ்துவ மதத்தை நாடு முழுமைக்கும் கொண்டுவர வேண்டுமானால் முதலில் திருக்குறள் , தேவாரம் திருவாசகம் இதைப்பற்றியெல்லாம் கற்று பேசுங்கள் இந்துக்களும் நம்புவார்கள் நட்பு பாராட்டுவார்கள் பின்னர் அவர்களை நம் மதத்தை பின் பற்ற எளிதில் கொண்டுவந்து இந்தியாவை ஒரு கிறிஸ்துவ நாடக மாற்றிவிடலாம் என்று ஒரு பெண் பேசுகிறார் .. இதிலிருந்து இவர்கள் சீமான், திருமால்வளவன் போன்றோர் செயல்படுகிறார்கள் பணத்தின் தேவைக்கு என்பது நிதர்சனம்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
15 பிப், 2020 - 05:06Report Abuse
meenakshisundaramதிருவாசகம் என்பது சாதாரண வார்த்தைகளால் உருவானதல்ல .வாழ்நாள் முழுவதுவும் தமிழ் பேசுபவனால் கூட அதை படிக்கக்கொடுத்த முடியாது ஒரு தரம் கூட .பகல் உடைக்கும் பாதங்கள் கொண்டது.அதை பாராயணம் செய்வது மிக கடினம்.-ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகம் 'என்னும் கூறுவது முழுக்க உண்மை.அதை ஒருவன் படித்து விட்டாலே போதும் அவனுக்கு சிவா பக்தி அட்டஹானை அளவு வந்து விடும் .பின்னர் அவன் மதம் மாற மாட்டான் .இதை அறியாத சீமான் ஏதோ ஜாதிக்கூட்டத்தினிடை வாக்கு சேகரிப்பது போல எளிது என்று பினாத்துகிறார்.ஏன் அவரால் 'திருக்குறளை'கூட படிக்க முடியாது .அதை முழுவதுவும் படித்தாலே பொது .உண்மை தமிழனாகவும் ஹிந்துவாகவும் மாறி விடுவார்.அதனால்தான் அந்தய காலத்திலேயே India வந்து மதம் மாற்ற நினைத்தவன் கூட தனது கல்லறையில் 'இங்கு ஒரு தமிழன் உறங்குகிறான்'என்றே பொறிக்க சொன்னான்...
Rate this:
Raju - chennai,இந்தியா
13 பிப், 2020 - 20:38 Report Abuse
Raju எங்கள் சிவன் கோவிலில் உனக்கு என்ன வேளை
Rate this:
venkatesaperumal - sivakasi,இந்தியா
13 பிப், 2020 - 12:09 Report Abuse
venkatesaperumal உண்மை சகோதரி சைமன் / சீமான் இதுபோல்அவன் மத கடவுளான இயேசுவை அவமான படுத்திவிட்டு சர்ச்சுகளில் முதல் மரியாதையை எந்த பாதிரி தரைமட்டங்க ஆனா இந்த இளிச்சவாய இந்து அர்ச்சகர் மட்டும் இப்படி கேடுகட்ட இந்து விரோதிகளுக்கு முதல் மரியாதையை செய்து ஹிந்துக்களை அசிங்கப்படுத்துறாங்க
Rate this:
venkatesaperumal - sivakasi,இந்தியா
13 பிப், 2020 - 12:09 Report Abuse
venkatesaperumal உண்மை சகோதரி சைமன் / சீமான் இதுபோல்அவன் மத கடவுளான இயேசுவை அவமான படுத்திவிட்டு சர்ச்சுகளில் முதல் மரியாதையை எந்த பாதிரி தரைமட்டங்க ஆனா இந்த இளிச்சவாய இந்து அர்ச்சகர் மட்டும் இப்படி கேடுகட்ட இந்து விரோதிகளுக்கு முதல் மரியாதையை செய்து ஹிந்துக்களை அசிங்கப்படுத்துறாங்க
Rate this:
மேலும் 75 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in