Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யேசுதாஸ் தம்பி மர்ம மரணம்: ஏரியில் பிணமாக மிதந்தார்

07 பிப், 2020 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Singer-KJ-Yesudass-younger-brother-found-dead

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவருடைய ஒரே தம்பி கே.ஜே.ஜஸ்டின்(வயது 60). இவரை கடந்த 2நாளாக காணவில்லை. இதைத் தொடர்ந்து அவர் மனைவி திரிக்கர போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்டினை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜஸ்டின் வயது உடைய ஒருவரது சடலம் ஏரியில் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்கர போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் ஜேசுதாஸின் சகோதரர் தான் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரது சடலத்தை எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ஜஸ்டின் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது மூத்த மகன் ஜிஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். பொருளாதார பிரச்சினை, கடன் தொல்லை, மகன் மரணம் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்த ஜஸ்டின் தற்கொலை செய்து கொண்டாரா என்கிற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தயாரா?சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய ... 103வது வயதில் ஹாலிவுட் நடிகர் கிரிக் டக்ளஸ் மரணம் 103வது வயதில் ஹாலிவுட் நடிகர் கிரிக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

karutthu - nainital,இந்தியா
10 பிப், 2020 - 18:21 Report Abuse
karutthu பொருளாதார பிரச்னை என்றால் யேசுதாஸ் உதவியிருக்கலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in