Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தர்பார்' நஷ்டம்: சினிமா வியாபாரம் மாறுமா?

06 பிப், 2020 - 18:30 IST
எழுத்தின் அளவு:
Darbar-Loss-:-Did-Business-type-will-change?

ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் படங்கள் மற்ற ஹீரோக்களின் படங்களை விட அதிக சர்ச்சையை சந்திக்கின்றன. கடைசியாக 'லிங்கா' படத்திற்காக நஷ்டத் தொகை வேண்டும் என வினியோகஸ்தர்கள் போராடினர். அவற்றிற்கு ஒரு தொகையைக் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

அதன்பின் இப்படி ஒரு நஷ்டம் வந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களே, வினியோகஸ்தர்களின் பிரச்சினையைக் கையாள வேண்டும் என ரஜினிகாந்த் கூறிவிட்டார். அதனால்தான் 'கபாலி, காலா, 2.0, பேட்ட' ஆகிய படங்களைப் பற்றிய உண்மை வசூல் நிலவரங்கள், நஷ்ட விவரங்கள் வெளியாகவில்லை. சில நஷ்டங்களை வெளியில் தெரியாமல் சமாதானமாக முடித்துக் கொண்டார்களாம்.

தற்போது ரஜினி நடித்து வெளிவந்த 'தர்பார்' படத்தின் நஷ்டத்திற்காக வினியோகஸ்தர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். அவர்களை சந்திக்க ரஜினிகாந்த், இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் ஆகியோர் மறுத்துவிட்டார்கள். திரையுலக கூட்டமைப்பினரும், வினியோகஸ்தர்களுக்காக பஞ்சாயத்துப் பேசப் போவதில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது.

அது குறித்து நம்மிடம் பேசிய ஒரு சீனியர் வினியோகஸ்தர், “முன்பெல்லாம் ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகு வினியோகஸ்தர்களுக்குப் படத்தை திரையிட்டுக் காட்டியே வியாபாரம் நடத்துவார்கள். ஆனால், இப்போது ரஜினி படமல்ல மற்ற ஹீரோக்கள் படத்தைக் கூட தயாரிப்பாளர்கள் யாரும் திரையிட்டுக் காட்டுவதில்லை.

படத்தில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமலேயே பலரும் அந்தப் படத்திற்கு விலை பேசுகிறார்கள். 5 ரூபாய்க்கு வாங்கும் வாழைப்பழம் கூட எப்படி இருக்கிறது என்று பார்த்து வாங்குவோம். ஆனால், 50, 60 கோடி வரை வியாபாரம் நடக்கும் ஒரு படத்திற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாமல் தான் வினியோகஸ்தர்கள் படத்தை வாங்குகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

'தர்பார்' படத்தைப் பொறுத்தவரையில், உதாரணத்திற்கு ஒரு ஏரியாவின் வியாபாரம் 5 கோடி தான் மதிப்பு என்றால், தொழிலுக்கு ஆசையில் வந்தவர்கள் அதை 6, 7 கோடி கொடுத்து வாங்குகிறார்கள். பின்னர் நஷ்டம் என்று பேசுகிறார்கள். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். இனி, படங்களைப் பார்க்காமல் வாங்க மாட்டோம் என ஒட்டு மொத்த வினியோகஸ்தர்களும் முடிவெடுக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது,” என்கிறார்.

இதை இருக்கும் சங்கங்களும், வினியோகஸ்தர்களும் பின்பற்றுவார்களா என்பதே கேள்வி ?.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அவசர திருமணம் ஏன்? - யோகி பாபு பேட்டிஅவசர திருமணம் ஏன்? - யோகி பாபு பேட்டி மீண்டும் வருகிறார் விமல் மீண்டும் வருகிறார் விமல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

thulakol - coimbatore,இந்தியா
07 பிப், 2020 - 18:11 Report Abuse
thulakol விநியோகஸ்தர்கள் ஒரு மாதம் முடிந்த பின்னல் தான் தெரிந்ததா வசூல் ஆகவில்லை என்று . இதில் சூழ்ச்சி உள்ளது . ரஜினி படம் அவளுவு எளிதில் நஷ்டம் அடையாது . ஆடிட் செய்யவேண்டும்
Rate this:
JMK - Madurai,இந்தியா
07 பிப், 2020 - 10:43 Report Abuse
JMK சுறா / பில்லா ௨ / விவேகம் / பைரவா / புலி இந்த படங்களின் நஷ்டம் யாரை கேப்பிங்க ?
Rate this:
07 பிப், 2020 - 09:16 Report Abuse
சதீஷ் கண்டிப்பாக இப்படி படம் பார்த்து வியாபாரம் நடந்தால் தான் லாபம் இருக்கும். நடிகர் சம்பளம் குறையும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in