Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவசர திருமணம் ஏன்? - யோகி பாபு பேட்டி

06 பிப், 2020 - 18:24 IST
எழுத்தின் அளவு:
Yogi-babu-replied-why-he-married-suddenly?

காமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று(பிப்., 6) வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திடுமென நடந்த இந்த திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில், சினிமா துறை மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக அவசர நிலையில் நான் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதனால் யாருக்கும் முறைப்படி அழைக்கவும் திருமணத்தில் உங்களுடைய வாழ்த்துக்களை பெறவும் முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.

அனைவரும் என்னுடைய குடும்ப சூழலை புரிந்து கொள்ள வேண்டும் என்று இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். எதிர்பாராத சில சந்தர்ப்பங்களில் எதிர்பாராத சில சூழ்நிலைகள் என் திருமணத்தை அவசர நிலையில் நடத்த வேண்டிய நிலையில் நான் இருந்தேன். என்ன முடிவு எடுப்பது என்று நான் குழப்பமான நிலையில் இருந்தேன். இரண்டு குடும்பத்தாரிடமும் உட்கார்ந்து பேசி சில முடிவுகள் எடுத்தோம்.

என் திருமணத்திற்கு முறைப்படி நான் யாரையும் அழைக்கவில்லை என்ற வருத்தங்களும், கோபங்களும் பலருக்கு இருந்து இருக்கலாம். ஆனாலும், என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் மூலமும் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும் படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் சொன்ன உங்கள் ஒவ்வொருவரையும் கைபிடித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் என் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அனைவரையும் முறைப்படி அழைத்து உங்கள் வாழ்த்துக்களை பெற இருக்கிறேன். விரைவில் நாம் சந்திப்போம் என்றார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
‛பிகில் படத்தில் பல கோடி வரி ஏய்ப்பு: ரூ.77 கோடி ரொக்கம் பறிமுதல்‛பிகில் படத்தில் பல கோடி வரி ஏய்ப்பு: ... 'தர்பார்' நஷ்டம்: சினிமா வியாபாரம் மாறுமா? 'தர்பார்' நஷ்டம்: சினிமா வியாபாரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

DMK - CHENNAI,இந்தியா
11 பிப், 2020 - 12:18 Report Abuse
DMK இவேறெல்லாம் ஒரு சிரிப்பு நடிகரா. மதுரை/ ராமநாதபுரம் பகுதியில் உள்ளவரை தேர்ந்து எடுத்து பயிற்சி கொடுங்கள்
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
07 பிப், 2020 - 18:30 Report Abuse
Subramanian Arunachalam யோகி பாபு தான் மற்றவர்களில் இருந்து மாறு பட்ட மனிதர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
07 பிப், 2020 - 14:33 Report Abuse
narayanan iyer தாங்கள் ஒன்றும் யோகி இல்லை "யோகம்" பெற்றவர் .வாழ்க்கையில் முதல் அடிவைக்கும் உங்கள் இருவருக்கும் எல்லா வளங்களும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பான் .வாழ்க வளமுடன் .
Rate this:
INDIAN Kumar - chennai,இந்தியா
07 பிப், 2020 - 13:39 Report Abuse
INDIAN Kumar எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்க
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
07 பிப், 2020 - 10:19 Report Abuse
N Annamalai வாழ்த்துக்கள் யோகி பாபு அவர்களே .
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in