நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
பிகில் படம் வசூல் தொடர்பாக பல கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. நடிகர் விஜய் உட்பட பலரது வீடு அலுவலங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.77 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்வதால் பலர் இதில் சிக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியான படம் ‛பிகில். அட்லீ இயக்கி இருந்தார். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தனர். இப்படம் வசூல் தொடர்பாக வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏஜிஎஸ்., நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு சொந்தமான அலுவலகம், வீடு மற்றும் திரையரங்குகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது.
இப்படம் தொடர்பாக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்தும் புகார் எழுந்தது. இதன் காரணமாக நெய்வேலியில் நேற்று(பிப்.,5) மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரித்தனர். படப்பிடிப்புத் தளத்திலிருந்த விஜய்யை, அதிகாரிகளின் காரில் ஏற்றி அவருக்கு சொந்தமான வீடுகளில் வைத்து விசாரித்தனர். 20 மணிநேரத்திற்கும் மேலாக விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் சொத்து விவரங்கள், திரைப்படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
இதேப்போன்று கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான அன்புச்செழியன் சென்னை, மதுரை வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. மதுரை கீரைத்துறை, காமராஜர் ரோட்டில் உள்ள அவரது வீடுகள், தெற்கு மாசி வீதி அலுவலகத்திலும் நேற்று சென்னையில் இருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏஜிஎஸ்., நிறுவனத்திற்கு அன்புச்செழியன் நிதி வழங்கி இருக்கலாம் என்றும், இப்படத் தயாரிப்பில் முறைகேடு நடத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே சோதனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கிய சோதனை இன்று வரை நீடித்தது. இதில் அவரிடமிருந்து ரொக்கமாக ரூ.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.