யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
அப்பா டி.ராஜேந்தரை போன்று சிம்புவும் பல துறைகளில் வில்லவர். ஒரு சிறிய தடுமாற்றத்திற்கு பின் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் தனது 37வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் மாநாடு படக்குழு உடன் கொண்டாடினார் சிம்பு.
‛மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞராக சிம்பு நடிக்கிறார். பிறந்தநாளின் போது அவரது கேரக்டர் பெயர் வெளியிட்டபோது, அதில் சிம்புவின் பெயர் சிலம்பரசன்.டி.ஆர். என குறிப்பிடப்பட்டு இருந்தது.
சிலம்பரசனாக சினிமாவுக்கு வந்தவர் நண்பர்கள், சினிமா வட்டாரத்தில் சிம்பு என அழைக்கப்பட்டார். அதன்பின்னர் தனது பெயரை எஸ்.டி.ஆர். என மாற்றினார். பின்னர் மீண்டும் சிம்புவுக்கு மாறினார். இப்போது சிலம்பரசன்.டி.ஆர்.,ஆக உருவெடுத்துள்ளார். இந்த பெயர் மாற்றமாவது சிம்புவுக்கு வாழ்வில் ஏற்றத்தை தரட்டும். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், ஜோசியம் மற்றும் நியூமரலாஜியில் கில்லாடி ஆவார்.