Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தர்பார்' - தயாரிப்பு நிறுவனத்துக்கே 70 கோடி நஷ்டம்?

05 பிப், 2020 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Darbar-:-Rs.70-crore-loss-to-Producer

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'தர்பார்' படம் ஐந்தாவது வாரத்தைத் தொட உள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக படத்தை தமிழ்நாடு முழுவதும் ஏரியா வாரியாக வினியோகம் செய்த வினியோகஸ்தர்கள் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அதை ஈடுகட்ட வேண்டும் என பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், ஏஆர்முருகதாஸ் ஆகியோரை சந்திக்க முயற்சித்து தோல்வியடைந்தனர். இதனிடையே, படத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி வினியோகஸ்தரான பாண்டி கண்ணன் 'தர்பார்' நஷ்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“முதல் வாரம் முடிந்த பின், படத்திற்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது. அது பற்றி தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தோம். அவர்கள் ஒரு வாரம் காத்திருங்கள் என்றார்கள். அதனால், நாங்கள் படத்தை தியேட்டரை விட்டு எடுக்கவில்லை. அது ரஜினிகாந்தின் இமேஜுக்கும் பாதகமாக முடிந்திருக்கும். இப்போது லைகா நிறுவனத்தாரைத் தொடர்பு கொண்ட போது, படத்தைத் தயாரித்த வகையில் அவர்களுக்கே 70 கோடி நஷ்டம் வந்துள்ளது என்று தெரிவித்தார்கள். ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோருக்கு மிக அதிகமான சம்பளம் கொடுத்துள்ளார்கள். அதனால், அவர்களை சந்திக்கும்படி எங்களை கேட்டுக் கொண்டார்கள்,” எனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் வினியோகஸ்தர்களை சந்திக்கவில்லை என்றால், அடுத்தக்கட்ட போராட்டமாக தியேட்டர் அதிபர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
‛பிங்க்' தெலுங்கு ரீமேக் தலைப்பு என்ன?‛பிங்க்' தெலுங்கு ரீமேக் தலைப்பு ... பாலாவின் மல்டி ஸ்டார் படத்தில் சூர்யா பாலாவின் மல்டி ஸ்டார் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

R Sundar - Coimbatore,இந்தியா
17 பிப், 2020 - 12:15 Report Abuse
R Sundar தமிழ் தெலுகு ஹிந்தி சினிமாவுல ஸ்டார்களுக்கு சம்பளம் எப்படி? படத்தின் லாபத்தில் இத்தனை விழுக்காடுன்னுதான் பேசப்படும். கணிசமான லாபம் வந்தா ஸ்டாருக்கு அவர் கேட்ட சம்பளம் தேறும் தர்பார் படம் நஷ்டம்னா... ரஜினிக்கு நூறு கோடி எங்கேயிருந்து வரும்? அதே மாதிரி பீகிள் நஷ்டம்னா விஜய்க்கு அவர் கேட்ட சம்பளம் தேறாது.... என்ன தேறுதோ அதை வாங்கிகிட்டு கம்முன்னு இருக்க வேண்டியதுதான். 100 கோடி 150 கோடி சம்பளம்னு யாரு வேணும்னா சொல்லலாம்... பத்திரிக்கைலயும் எழுதலாம்... படம் என்ன லாபம் எடுக்குதோ அதுக்கு ஏத்த மாதிரிதான் சம்பளம் அமையும். லைகா போனற கார்ப்பரேட் தயாரிப்பாளர் கேட்ட உடனேயே 100 கோடி தர மாட்டார். உதாரணத்துக்கு... கமலுக்கு பிக் பாஸ் 3 சீசனுக்கு 100 கோடி சம்பளமும் நிறைய செய்தி வந்தது. பிக் பாஸ் கணிசமான பணம் ஈட்டினா கமலுக்கு அவ்வளவு சம்பளம் VIJAY TV தரும் ... இல்லைனா... வசூலுக்கு ஏத்தமாதிரி சம்பளம்தான் தரும். இதெல்லாம் கார்ப்பரேட் பிஸினஸ்ல சகஜம்.
Rate this:
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
12 பிப், 2020 - 13:56 Report Abuse
Ganapathysubramanian Gopinathan ஆதாயம் இல்லாமல் வியாபாரி ஆத்தோடு போவானா?
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
08 பிப், 2020 - 10:35 Report Abuse
Kumar இவனுக்கு இப்போது மார்க்கெட் இல்லை.
Rate this:
JMK - Madurai,இந்தியா
08 பிப், 2020 - 17:12Report Abuse
JMKயாருக்கு விஜய்க்கு மார்க்கெட் இல்ல ? போயா விஜய்க்கு கோயம்பேடு மார்க்கெட் உள்ளது...
Rate this:
sam - Bangalore,இந்தியா
08 பிப், 2020 - 05:24 Report Abuse
sam AR Murugadoss is overrated director, except Ramana,Ghajini and thupakki all other movie are scrap movies.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08 பிப், 2020 - 00:28 Report Abuse
Ramesh R நஷ்டத்தை மறைக்க ஊளை இடுகிறார்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in