Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தி வெப் சீரிஸில் அமலா பால்

05 பிப், 2020 - 11:14 IST
எழுத்தின் அளவு:
Amalapaul-in-Webseries

மலையாளத்திலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் அமலா பால். 2010ம் ஆண்டில் வெளிவந்த 'மைனா' படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் பல படங்களில் நடித்தார். விஜய்யுடன் 'தலைவா', ஜெயம் ரவியுடன் 'நிமிர்ந்து நில்', தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி 1, 2', மற்றும் ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்கள் அவர் நடித்த சில முக்கிய படங்கள்.

தற்போது தமிழில் 'அதோ அந்த பறவை போல' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள அமலா பால், தற்போது 'அசுரன்' ரீமேக்கான 'நாரப்பா' படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கத் தேர்வாகி உள்ளார். பிரபல ஹிந்திப்பட இயக்குனரான மகேஷ் பட் தயாரிக்கும் இத் தொடரில் அமலா பால், தாஹிர், அம்ரிதா ஆகியோர் நடிக்கிறார்கள். புஷ்ப்தீப் ரத்வாஜ் இத் தொடரை இயக்குகிறார்.

70களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்பட இயக்குனருக்கும், ஒரு முன்னணி நடிகைக்ளும் இடையே இருந்த காதல் பற்றிய கதைதான் இத் தொடராம். மறைந்த நடிகை பர்வீன் பாபிக்கும், மகேஷ் பட்டுக்கும் இடையே நடந்த உண்மைக் கதை அது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உறவுக்கார பெண்ணை மணந்தார் யோகிபாபுஉறவுக்கார பெண்ணை மணந்தார் யோகிபாபு '96' மேஜிக்கை நிகழ்த்துமா 'ஜானு' ? '96' மேஜிக்கை நிகழ்த்துமா 'ஜானு' ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in