சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
மஞ்சு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார் மும்பை மாடல் அழகியான ரியா சுமன். நானி நடிப்பில் விர்சினி வர்மா இயக்கிய படம். படம் பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. ஆனாலும் ரியா சுமனுக்கு வாய்ப்புகள் வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பேப்பர் பாய் என்ற படத்தில் மீண்டும் நடித்தார். அதன் பிறகும் வாய்ப்புகள் அமையவில்லை.
தமிழில் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகி உள்ள ஜிப்ஸி படத்தில் நடிக்க ஆடிசனில் கலந்து கொண்டார். ஆனால் அதில் தேர்வாகவில்லை. இந்த நிலையில் தான் தற்போது ஜீவா நடிக்கும் சீறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ரத்ன சிவா இயக்குகிறார், இமான் இசை அமைக்கிறார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ரியா சுமன் கூறியதாவது: தமிழ் படத்தில் முன்பே நான் வந்திருக்க வேண்டியது, வாய்ப்புகள் கை நழுவி இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். முதன் முதலாக தமிழ் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி. எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. இயக்குநருக்கு நடிக்கும் திறமை இருக்கிறது. அவர் ஸ்பாட்டில் நடித்து காட்டி அவ்வளவு எளிதாக சொல்லித்தருவார். ஜீவா படப்பிடிப்பில் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். இந்தப்படத்தில் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் பக்கா கமர்ஷியலாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும். என்றார்.