Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை: அசோக் செல்வன் விளக்கம்

04 பிப், 2020 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-not-acted-in-guest-role-says-Ashok-Selvan

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ‛ஓ மை கடவுளே'. இப்படத்தில் விஜய் சேதுபதியும், இயக்குனர் கவுதம் மேனனும் கவுரவ வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், ஹீரோவுமான அசோக் செல்வன் கூறியதாவது:

இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவில்லை முக்கியமான கேரக்டரில், கடவுளாக நடிக்கிறார். என் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்னைகளை கடவுளாக வந்து அவர் தீர்த்து வைப்பார், அவர் நடித்த காட்சிகள் 25 நிமிடங்கள் படத்தில் இடம் பெறுகிறது.

குறும்படங்கள் காலத்திலிருந்தே விஜய்சேதுபதி எனது நெருங்கிய நண்பர். எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். இப்படத்தின் கதையை கேட்ட உடனேயே கடவுள் கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தோம். காரணம் படத்தில் அவர் பேசும் வசனங்கள் நம்பகத் தன்மையோடு இருக்க வேண்டும். அவர் சொல்வதை ரசிகர்கள் ஏற்க வேண்டும். நாங்கள் எதிர்பார்த்ததைவிட விஜய் சேதுபதியின் கேரக்டர் அருமையாக வந்துள்ளது.

படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிப்பது கவுதம் மேனன். அவர் அவராகவே அதாவது, இயக்குனர் ஆகவே நடித்துள்ளார். வாணி போஜன் இதுவரை நடித்திராத போல்டான கேரக்டரில் நடித்திருக்கிறார். ரித்திகா சிங் ஒரு கிறிஸ்தவ மணப்பெண்ணாக நடித்திருக்கிறார். அவருக்கும் இப்படம் தமிழில் நல்ல ரீ-என்ட்ரி கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
13 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக நடிக்கும் கார்த்திக்13 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக ... ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‛கைதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‛கைதி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in