Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரண்ட்ஷிப்-க்காக இணைந்த ஹர்பஜன் சிங் - லாஸ்லியா

03 பிப், 2020 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Harbajan-Singh,-Losliya-become-hero,-heroine-for-Friendship

கிரிக்கெட் விளையாட்டு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஹர்பஜன் சிங். இவர், சென்னை கிரிக்கெட் அணிக்காக ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடத் துவங்கிய பின், தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம் ஆனார். அதோடு, அவரும் தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்கள் மீது அதீத ஆர்வம் கொண்டார். தமிழைக் கற்கத் துவங்கியவர், தமிழகத்தில் நடிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தமிழிலேயே டுவீட் போடத் துவங்கினார்.

இந்நிலையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆவல் கொண்டார். இதையடுத்து, கார்த்தி யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார்.

யூ-ட்யூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள 'திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீசஸ்' என்ற தொடரில் திருவள்ளுவராக நடித்தார். இந்தத் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதையடுத்து, அவர் சினிமாவில் கதாநாயகனாகவும் அரிதாரம் பூசுகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜே.பி.ஆர் மற்றும் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு பிரண்ட்ஷிப் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை ஹர்பஜன் சிங்கே, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அவருடைய பதிவு: ‛‛நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம்'' என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாகலாஸ்லியா நடிக்கிறார். பிக்பாஸ் 3யில் பிரபலமான இவர், நாயகியாக நடிக்கும் முதல்படம் இதுவாகும். ஆக ஹர்பஜனும், லாஸ்லியாகவும் நாயகன், நாயகியாக பிரண்ட்ஷிப்-க்காக இணைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா படத்தில் இணையும் ராஷ்மிகா?சூர்யா படத்தில் இணையும் ராஷ்மிகா? 'ரூட்' மாறும் தனுஷ்! 'ரூட்' மாறும் தனுஷ்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in