Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சனம் ஷெட்டியை திருமணம் செய்ய மாட்டேன்: தர்ஷன் உறுதி

01 பிப், 2020 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Will-never-marry-Sanam-Shetty-says-Tharsan

பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் தர்ஷன், தன்னை காதலித்து நிச்சயம் செய்த பின், திருமணம் செய்ய மறுப்பதாக, நடிகை ஷனம் ஷெட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தர்ஷன், நிச்சயம் அவரை திருமணம் செய்ய மாட்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.

அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் தர்ஷனும், இவரும் காதலித்தனர். நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் என் நடத்தை மீது, அபாண்டமாக பழி சுமத்தினார். என்னை, உடலாலும், மனதாலும் காயப்படுத்தினார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

என்னிடம், 15 லட்சம் ரூபாய் வரை வாங்கி, மோசடி செய்து விட்டார். காதலித்து, நிச்சயம் செய்த பின், என்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், கொலை மிரட்டலும் விடுக்கிறார். இதற்கு, அவரது நண்பர்களும் துணையாக உள்ளனர். அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.இந்நிலையில் தன் தரப்பு நியாயத்தை சொல்ல, செய்தியாளர்களை இன்று(பிப்.,1) சந்தித்தார் தர்ஷன். அவர் பேசுகையில், சினிமா மீதுள்ள ஆசையால் என் பைக்கை விற்று சென்னைக்கு வந்தேன். விளம்பரங்களிலும், சின்ன வேடங்களிலும் நடித்து வந்தேன். விளம்பர படம் ஒன்றில் தான் சனம் ஷெட்டியின் அறிமுகம் கிடைத்தது. பின் பேஸ்புக்கில் பழகினோம். 2018ல் இருந்து தான் காதலிக்க ஆரம்பித்தோம். அதற்கு முன்னரே அவர் வேறு ஒருவரை காதலித்தார். நிச்சயதார்த்தம் நடந்த சமயத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்தது. நமது காதலை வெளியே சொல்ல வேண்டாம், கேரியர் பாதிக்கும் என சனம் தான் கூறினார். நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என சனம் தான் கூறினார். இது ரம்யா, சத்யாவிற்கு தெரியும்.

தங்கையின் திருமணம் முடிந்ததும், திருமணம் செய்யலாம் என்றேன். அவரும் சம்மதம் சொன்னார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அவரது நடவடிக்கை மாறியது. என்னால் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு பறிபோனதாக குற்றம் சாட்டினார். பிக்பாஸ் பெண் போட்டியாளர்களுடன் என்னை பேசக் கூடாது என்றார். எங்க போனாலும் தன்னையும் உடன் அழைத்து சொல்ல கட்டாயப்படுத்தினார். பட வாய்ப்பிலும் தன்னை நாயகியாக போட வேண்டும் என வற்புறுத்தினார்.இப்படி எங்களுக்குள் சின்ன சின்ன சண்டை ஆரம்பமானது. அவர் கொடுத்த பிகினி போட்டோ ஷூட் இன்டர்வியூ எனக்கு பிடிக்கவில்லை. இதுப்பற்றி கேட்டேன். எல்லாம் எனக்காக தான் என்றார். இதையெல்லாம் கூட பொறுத்து கொண்டேன். எனக்கு மூன்று படம் ஓகே ஆகி இருந்தது. அந்த தயாரிப்பாளர்களிடம் சென்று, என்னைப்பற்றி ஏதேதோ சொல்லி அந்த வாய்ப்புகளை தடுத்தார். பின் தற்கொலை செய்வேன் என மிரட்டினார். மேலும் ஒரு பார்ட்டியில் முன்னாள் காதலன் உடன் அவர் சென்றார்.

எனக்கு பணம் கொடுத்ததாக சனம் சொல்லியிருக்கிறார். மாதம் மாதம் செலவுக்கு என் அண்ணன் தான் பணம் கொடுத்து வந்தார். தொழில் ரீதியாக எனக்கு நிறைய உதவி செய்துள்ளார் சனம். அதை நான் மறுக்கவில்லை. பட வாய்ப்பு, விளம்பரங்களில் என்னை சிபாரிசு செய்துள்ளார். சனமிடம் எந்த பண உதவியும் செய்யவில்லை. விசா தொடர்பாக ஒரு ரூ.3.5 லட்சம் கொடுத்தார். அதையும் பிக்பாஸ் பணம் கொண்டு திருப்பி கொடுத்துவிட்டேன்.தங்கையின் திருமணம் முடிந்த பிறகு தான் திருமணம் நடக்கும் என என் அம்மா சொன்னார். மற்றபடி வேறு எதுவும் கூறவில்லை. ஆனால் இங்கு வந்து வேறு மாதிரி பேசியிருக்கிறார். நான் அவரை டார்ச்சர் செய்ததாக சொல்கிறார். உண்மையில் அவர் தான் என்னை டார்ச்சர் செய்தார். சென்னைக்கு வந்து 5 ஆண்டுகள் நான் கஷ்டப்பட்டதே ஒரு பட வாய்ப்பு கிடைக்காதா என்பதற்காக தான். ஆனால் அதையே அவர் தடுத்துவிட்டார். இவ்வளவு நடந்த பிறகு நான் எப்படி அவரை திருமணம் செய்வேன்.

ஷெரீன் எனது நண்பர் மட்டுமே. சனம் மீது வழக்கு தொடர மாட்டேன். அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன். ஆனால் அவர் வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொள்வேன். என் தரப்பு நியாயத்தையும், நான் வைத்துள்ள ஆதாரங்களையும் வைத்து அதை எதிர் கொள்வேன். இதுப்பற்றி கமிஷனரிடம் முறையிட உள்ளேன்.

இவ்வாறு தர்ஷன் கூறினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பள்ளித் தோழர்களுடன் கமலின் மலரும் நினைவுகள்பள்ளித் தோழர்களுடன் கமலின் மலரும் ... என் படங்கள் கத்தி மேல் நடப்பது போல்தான் இருக்கும்: மிஷ்கின் என் படங்கள் கத்தி மேல் நடப்பது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

?????????? - thanks ,அருபா
04 பிப், 2020 - 05:11 Report Abuse
?????????? நல்லவர்களையும் உண்மையானவர்களை என்றும் பக்கத்தில் வைத்திருக்கவும். இல்லையென்றால், காலைவாரிவிடுவார்கள்.
Rate this:
02 பிப், 2020 - 12:21 Report Abuse
ஸாயிப்ரியா Big boss புகழ் அனைவரும் வரலாற்று சாதனை படைப்பது பெருமையான விஷயம். Great
Rate this:
02 பிப், 2020 - 09:47 Report Abuse
Magudeeswaran R இவர்களுக்கெல்லாம் இவ்வளவு இடம் கொடுத்து, முக்கியத்துவம் கொடுத்து செய்தியா?😤
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02 பிப், 2020 - 06:04 Report Abuse
Sanny நேற்று முலைத்த ஊர், பேர் தெரியாத காளான்களுக்கு இந்தளவு ( கொரோன வைரஸ் இக்கு கொடுப்பது போல) பில்ட் அப் கொடுக்கத்தேவை இல்லை.
Rate this:
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
02 பிப், 2020 - 04:31 Report Abuse
Krishna Personal issues. They will be alright pretty soon. Media shouldnt involve and spoil privacy.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in