திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் |
கமல்ஹாசன் பள்ளி படிப்போடு நிறுத்தி கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக நடித்ததாலும், நடனம், இயக்கம், ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாலும் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. அவர் பள்ளி படிப்பை முடித்தது சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்.சி.டி.எம் பள்ளியில்.
இந்த பள்ளியில் 1970ம் ஆண்டில் படித்த மாணவர்களின் மறு சந்திப்பு நிகழ்ச்சி (ரீயூனியன்) நேற்று நடந்தது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். பள்ளியின் சீருடையான காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் அனைவரும் கலந்து கொண்டனர்.
தனது பள்ளி பருவத்து மாணவர்களை சந்தித்த கமல், அவர்களுடன் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர்களுடன் தனது வகுப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வுக்கூடம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தார். இந்த நிகழ்ச்சியில் கமலுடன் படித்த 20பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார் கமல். அனைவரும் இணைந்து பள்ளிக்கு புரொஜக்டர் ஒன்றை பரிசாக வழங்கினர்.
இதுகுறித்து கமல் சமூகவலைதளத்தில், ‛‛நண்பர்காள்!! இன்றைய நமது சந்திப்பு, என்னை சமநிலைப்படுத்தும் பல நிகழ்வுகளில் ஒன்று. தொடர்ந்து கற்போம், கற்ற கை மண்ணளவை, பிறந்த மண் போல் காப்போம். மகிழ்ந்தேன், தெளிந்தேன். நன்றி கமல் ஹாசன்'' என பதிவிட்டுள்ளார்.