Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேய்மாமா: வடிவேலுக்கு பதில் யோகிபாபு

01 பிப், 2020 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Peimama-:-Vadivelu-out,-Yogibabu-in

சார்லி சாப்ளின், இங்கிலீஸ்காரன், என்னம்மா கண்ணு, மகாநடிகன் உள்பட பல படங்களை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம், இவர் ஆரம்பித்த ஜெயிக்கிற குதிர படம் பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் பேய்மாமா என்ற படத்தை துவக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கிறார் என்று அறிவித்திருந்தார். அறிவித்து பல மாதங்கள் ஆகியும் படம் தொடங்கப்படவில்லை. சில பல பிரச்னைகளால் பேய்மாமா படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யோகிபாபு நடிக்கிறார். யோகிபாவுடன் பசங்க செந்தி, லவிங்ஸ்டன், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, கோவை சரளா என பெரிய காமெடி பட்டாளமே நடிக்கிறது.

இதுகுறித்து இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது: படத்தில் முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்தது. அவரை மனதில் வைத்து தான் கதை எழுதியிருந்தேன். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக யோகிபாபு நடிக்கிறார். அவருக்கு ஏற்றமாதிரி காட்சிகளில் மாற்றம் செய்திருக்கிறேன். பேய் ஓட்டுவதாக கூறி பணம் பறிக்கும் கும்பலின் தலைவர் யோகிபாபு. ஒரு வீட்டில் பேய் விரட்டுவற்காக செல்கிறார். அங்கு நிஜமாகவே இருக்கும் பேய், யோகிபாபுவை பிடித்துக் கொள்கிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை முழுநீள காமெடியாக சொல்லும் படம். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சொந்த தியேட்டரில் பிகிலை 100 நாள் ஓட்டிய தயாரிப்பு நிறுவனம்சொந்த தியேட்டரில் பிகிலை 100 நாள் ... முதல் படம் வெளியாவதற்கு முன்பே: தமிழுக்கு வந்த அனிகா விக்ரமன் முதல் படம் வெளியாவதற்கு முன்பே: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
04 பிப், 2020 - 19:02 Report Abuse
Vasudevan Srinivasan வடிவேலு அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in