Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராமாயணத்தில் லாஜிக் இல்லை - மிஷ்கின் கண்டுபிடிப்பு

31 ஜன, 2020 - 14:54 IST
எழுத்தின் அளவு:
No-logic-in-Ramayanam-says-Director-Mysskin

சென்னை: ‛‛இதிகாச புராணமான ராமாயணத்தில் எந்த லாஜிக்கும் இல்லை என்று சினிமா இயக்குனர் மிஷ்கின் பேசினார்.

மிஷ்கின் இயக்கிய ‛சைக்கோ படம் சமீபத்தில் வெளிவந்தது. கொடூரமான ஒரு சைக்கோ செய்யும் கொலையே கதைக்களம். இறுதியில் அவனை மன்னிப்பது போல் படம் முடியும். இதற்கு விமர்சனங்கள் எழுந்தன. இதில் என்ன லாஜிக் உள்ளது என மிஷ்கின் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், 60 பேட்டிகளை முடித்துவிட்டு நேற்று தான் பேசாமல் இருந்தேன். 4 கேள்வி தான், அதை 4 ஆயிரம் முறை மாற்றி மாற்றி சொன்னேன். சமூகத்தில் நடக்கும் லாஜிக் பிரச்னைகள். இதில் மிரண்டு போய் உள்ளேன். ராமாயணத்திலேயே எந்த லாஜிக்கும் இல்லை. இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவன் ராவணன். மனைவியை மீட்க ராமன் சண்டை போடுகிறான். தன் பக்கமும் நியாயம் இருப்பதாக எண்ணி ராவணனும் சண்டை போடுகிறான். விபீஷ்ணன், ராமன் கூட இணைகிறான்.

தனக்கு சாப்பாடு போட்டு உடலை வளர்த்த அண்ணன் ராவணன் கூட இருப்பேன் என்கிறான் கும்பகர்ணன். ராமனிடம் சாகப் போகிறேன் என தெரிந்தும் அண்ணன் உடன் சேர்த்து மடிந்து போவேன் என்கிறான். இவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. போரில் எல்லா ஆயுதங்களும் தீர்ந்து போகிறது. இன்று போய் நாளை வா என்கிறான் ராமன். அதிலும் லாஜிக் இல்லை என்றார்.

ராமாயணத்தில் தனி மனிதன் பின்பற்ற வேண்டிய அறநெறிகள் பற்றி எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு ‛சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்ற விமர்சனத்தை சமாளிப்பதற்காக ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை என மிஷ்கின் கூறுவது எந்தவகையில் நியாயம் என அங்கிருந்தவர்கள் புலம்பினர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கூட்டுக் குடும்ப தேவையை வலியுறுத்தும் ராஜவம்சம்கூட்டுக் குடும்ப தேவையை ... திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் - தர்ஷன் மீது சனம் ஷெட்டி போலீசில் புகார் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

selvaraj - chennai,இந்தியா
04 மே, 2020 - 00:16 Report Abuse
selvaraj உன்னை எல்லாம் எதை வைத்து அடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. ராமாயணத்தை குறை சொல்லி பேசியவன் அழிந்து போனதாகத்தான் வரலாறு உள்ளது. jakkirathai .
Rate this:
27 மார், 2020 - 16:32 Report Abuse
S B. RAVICHANDRAN இது ஒரு அல்லேலோயா
Rate this:
Srinivasachari Raghavan - Bangalore,இந்தியா
27 மார், 2020 - 15:06 Report Abuse
Srinivasachari Raghavan ராமாயணத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் விமர்சனம் பண்ணுவது இந்த சினிமாக்காரர்களுக்கே உரித்தானது. இது ஒரு மிக பெரிய காவ்யம். உலகத்தில் உள்ள நுறு கோடி இந்துக்களை அவமானம் செய்யும் இந்த பதிவு மிகவும் கண்டிக்க தக்கது. இந்த மாதிரி இந்துக்களை இழிவு படுத்தும் இந்த பதிவுக்கு மிஷ்கின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்
Rate this:
viney -  ( Posted via: Dinamalar Android App )
01 பிப், 2020 - 07:37 Report Abuse
viney un madham pathi pesuada enga hindhu pathi pesa unaku yokidai illai
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
31 ஜன, 2020 - 20:36 Report Abuse
K.P SARATHI ஒரு படம் சற்று வெற்றிப்பாதையில் செல்வதால் செருக்குடன் பேசுவது தவறு. மேலும் உங்கள் படத்தில் கிறிஸ்துவ மதத்தை உயர்வாக சொல்பவர். எனவே இந்து மதத்தை ஒப்பிடாதீர்கள்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in