மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு | பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் | 'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் | பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா | சூர்யா 42 : அதிரடி சண்டைக் காட்சி படமாக்கம் | 22வது திருமணநாளில் ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட வீடியோ | செவிலியர் குறித்து பேசியதற்காக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த பாலகிருஷ்ணா | மகேஷ்பாபு பட வாய்ப்பு கை நழுவியதால் வாட்ச் கம்பெனி வேலைக்கு போன சமீரா ரெட்டி |
காலமாற்றத்தால் காணாமல் போன கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தைக் கூறும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் 'ராஜவம்சம்'. கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குநர் சசிகுமார், நிக்கில் கல்ராணி ஆகியோர் நடித்திருக்கின்றன.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர்.
'என் குடும்பம் அம்பானி குடும்பம் இல்லடா. ஆனா, அன்பான குடும்பம் ' என்றும் 'இந்த பூமியில பறவை, மிருகம் கூட கூட்டம் கூட்டமா வாழ்ந்திட்டு இருக்கு. ஆனா மனுஷங்கன்னு சொல்லிக்கிற நாம தான் குடும்பமா, கூட்டமா வாழ மறந்திட்டோம்' என்றும் டீசரில் இடம்பெறும் வசனங்கள், கூட்டுக் குடும்பங்களின் தேவையையும், அதில் நிறைந்திருக்கும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.