விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‛ஞானச்செருக்கு'. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி, ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:
ஞானச்செருக்கு என்கிற இந்த படம் படைப்பாளர்களின் செருக்கு என்று தான் சொல்வேன். இந்த செருக்கு எல்லாம் எங்களுக்கு இருந்தது இல்லை. ஆனால் இந்த பையன்களுக்கு இருக்கிறது. இந்த படத்தின் கதை நாயகன் அதாவது, வீர சந்தானம் நடித்துள்ள கதாபாத்திரம், இயக்குநராகவும் நடிகராகவும் இருந்து வெற்றி பெற்று, பின்னர் ஓய்வு பெற்றவர். ஓய்வுபெற்ற பின்பும் நான் சும்மா இருக்க வேண்டுமா என நினைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என லட்சியத்துடன் புறப்பட்டு தனது துறையில் மீண்டும் சாதிப்பது தான் இந்த படத்தின் கதை.
எனக்கு இப்போது பிறந்த தேதிப்படி 85 வயதாகிறது. உடல் ஆரோக்கியத்தின் படி எனக்கு வயது 55. என் மனதின் படி வயது 35. இந்த இளைய தலைமுறை படைப்பாளிகளை பார்க்கும்போது வந்த சந்தோசத்தில் என் வயது 18 ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்தபிறகு, இதில் நடித்துள்ள வீர சந்தானத்தை பார்த்த பிறகு மீண்டும் ஒரு முறை வர வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
வயதாகிவிட்டது என்று சுருண்டு படுத்து விடாதே மீண்டும் எழுந்து செயல்படு என தூண்டும் விதமாக இந்த படத்தின் கருத்து அமைந்திருக்கிறது. இவர்கள் இன்று செய்யும கிராபிக்ஸ் வேலைகளை எல்லாம் நான் அன்றே செய்துவிட்டேன். அப்படியென்றால் இப்போது கிராபிக்ஸை வைத்துக்கொண்டு நான் எந்த அளவிற்கு வேலை செய்வேன் என்பதை எண்ணிப் பாருங்கள். ஏதோ போனால் போகிறது என விட்டு வைத்திருக்கிறோம். ஆனால் இந்த படம் மீண்டும் என்னை உற்சாகமாக வேலை செய்யும் இலட்சியத்திற்கு தூண்டியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.பி.முத்துராமன் மீண்டும் படம் இயக்க போவதாக சொன்ன உடன் விழாவுக்கு வந்திருந்த நடிகைகளை வசுந்தரா, கோமல் சர்மா, மதுமிதா ஆகியோர் உங்கள் படத்தில் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் சார் என்று கேட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.