Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி ராப் பாடல்கள் தான்: ஹிப் ஆப் தமிழா ஆதி சொல்கிறார்

29 ஜன, 2020 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Future-is-only-for-Rap-song-says-Aadhi

‛மீசையை முறுக்கு' படத்திற்கு பிறகு ஹிப்ஆப் தமிழா ஆதி நடித்துள்ள படம் ‛நான் சிரித்தால்'. இராணா இயக்க, சுந்தர்.சி. தயாரிக்கிறார். ஆதியுடன் ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார், ரவி மரியா, மாரிமுத்து, முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் வருகிற பிப்ரவரி 14ந் தேதி வெளிவருகிறது.

ஆதி கூறுகையில்: இணையதளத்தில் வைரலான கெக்க பிக்க குறும்படம் மிகவும் பிடித்திருந்தது. இதனை திரைப்படமாக மாற்ற விரும்பினேன். ஒரு மாதத்தில் முழு கதையையும் எழுதி கொடுத்தார் இயக்குனர். அப்படித்தான் நான் சிரித்தால் படம் தொடங்கியது..

இப்படத்தில் நான் நகைச்சுவை கதாநாயகனாக நடித்து இருக்கிறேன். படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் காந்தி. முழுநீள காமெடி படம் என்பதால் என் கதாபாத்திரம் எதற்கெடுத்தாலும் சிரிப்பது என்று அமைந்திருக்கும். ஆனால், அதில் காந்த சக்தி இருக்கும். முதல் பாதியில் என் கதாபாத்திரத்தை எல்லோரும் கேலி செய்து சிரிக்கும்போது பார்ப்பவர்களுக்கு பரிதாபமாக இருக்கும். படம் முழுக்க எல்லோரும் சிரித்துக் கொண்டே இருக்கும் படி நகைச்சுவையாக இருக்கும். ஆனாலும், ஒரு வலிமையான கருத்து இருக்கும்.

இசை என்பது பொதுவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தான். இசைக்கும் விதம் தான் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வேறுபடும். சினிமாவில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற நிலை இப்போது மாறியிருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் ராப் பாடல்கள் தான் அதிகம் இருக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினிக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு தள்ளுபடிரஜினிக்கு எதிரான வருமான வரித்துறை ... காலில் விழுவதைத் தவிர்த்த ஸ்ரேயா கோஷல்! காலில் விழுவதைத் தவிர்த்த ஸ்ரேயா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in