Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையிலிருந்து 1கிலோ மைசூர் பாகு, 2.5கிலோ சிப்ஸ் - ரன்வீருக்கு தீபிகா கட்டளை

26 ஜன, 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Dont-come-back-without-mysore-paku-and-hot-chips-:-Deepika-order-to-ranveer

கபில்தேவ் தலமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. இதை தழுவி ஹிந்தியில் 83 என்ற படம் உருவாகி உள்ளது. கபில் தேவ்வாக ரன்வீர் சிங்கும், இவரது மனைவி வேடத்தில் தீபிகாவும், நம்மூர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வௌியாகிறது. தமிழ் பதிப்பை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் வௌியிடுகிறது.

இப்படத்தின் தமிழ் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வௌியீடு சென்னையில் நடந்தது. கபில் தேவ், ஸ்ரீகாந்த், கமல்ஹாசன், கபீர் கான், ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 83 படக்குழுவின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வௌியிட்டு இருந்தார் ரன்வீர் சிங். இந்த பதிவு ரசிகர்களை அவ்வுளவாக ஈர்க்கவில்லை. ஆனால் இவரின் மனைவி தீபிகா, பதிவிட்ட செல்ல கட்டளை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

அதில், ''சென்னையில் இருந்து வரும் போது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் இருந்து 1 கிலோ மைசூர் பாக் மற்றும் ஹாட் சிப்ஸில் இருந்து 2.5 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்காமல் வீட்டுக்கு வரவேண்டாம்” என அன்புக்கட்டளையிட்டார்.

தீபிகாவின் கமென்ட்டை பார்த்து 83 படத்தின் இயக்குனர் கபீர் கானின் மனைவியும், இதேப் போன்றதொரு அன்புக் கட்டளையை தனது கணவருக்கு விதித்துள்ளார்.

தீபிகாவின் இந்த கமெண்ட் சமூக வலைதளத்தில் வைரலானது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதும் சித்தார்த்தெலுங்கு படத்திற்கு ஸ்கிரிப்ட் ... விஜய் - விஜய் சேதுபதி ஆக்ரோஷ மோதல்: மாஸ்டர் 3வது போஸ்டர் விஜய் - விஜய் சேதுபதி ஆக்ரோஷ மோதல்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

oce - tokyo,ஜப்பான்
27 ஜன, 2020 - 19:42 Report Abuse
oce உலகிலேயே தமிழரின் சமையல் பாங்கு தனி ருசி. அது சைவமாகவும் அசைவமாகவும் இருக்கலாம்.
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
27 ஜன, 2020 - 04:36 Report Abuse
chakra தீபிகா பவிஷு அவ்வளவுதானா .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in