அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் |
பிரபல தொலைக்காட்சித் தொடரான சரவணன் மீனாட்சியில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி இருப்பவர் செந்தில் குமாரி. இவர், சர்வர் சுந்தரம், மெர்சல், மதுர வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். பசங்க படத்தில் அவருடைய இயல்பான கீச்சுக் குரலில் நடித்து, எல்லோராலும் பாராட்டப்பட்டவர்.
அவர், தன்னுடைய இளமை காலம் குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான், நடிகர் விஜய்யின் தீவிரமான - வெறித்தனமான ரசிகை. திருமணம் ஆன பின் தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆவல், இளமை காலம் தொட்டு என்னிடம் இருந்து வந்தது. திருப்பாச்சிப் படத்தில் என்னுடைய சகோதரிக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நடிக்கப் போனார். விஜய் படம் என்பதால், அவரோடு படபிடிப்புக்குச் சென்றால் விஜய்யை பார்த்து விடலாம் என நினைத்தேன். அதற்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால், என்னுடைய கணவர் அதை தடுத்தார். மீறி, நான் செல்வேன் என சொன்னதும், என்னை அவர் தடுத்து தள்ளிவிட்டார். இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. இருந்தும், படபிடிப்புக்கு நான் சென்றேன். அங்கு விஜய்யை பார்த்தேன்.
இவ்வாறு செந்தில் குமாரி கூறினார்.