Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்

26 ஜன, 2020 - 13:51 IST
எழுத்தின் அளவு:
vijay-follows-ajith-style

மாஸ்டர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். அந்தப் படத்தில், அவரோடு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம், வரும் ஏப்ரல் 9ல் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.


படத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சூழலில், நடிகர் விஜய்யின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.


ஏற்கனவே, இயக்குநர் சமுத்திரக்கனி நடிகர் விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறார். இந்தக் கதையை அவர் நடிகர் விஜய்யிடம் சொல்லி வந்தார். ஆனால், அந்தக் கதையை படமாக்குவது குறித்து, நடிகர் விஜய் எதுவும் சொல்லாததால், அது தொடர்பாக மேலும் எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கிறது.


இந்நிலையில், அருண் ராஜா காமராஜ், வெற்றி மாறன், மகிழ் திருமேனி, பேரரசு, மோகன் ராஜா உள்ளிட்ட பல இயக்குநர்களும், நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருக்கின்றனர். அதனால், அடுத்து நடிகர் விஜய், யார் சொன்னக் கதையில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது.


வழக்கமாக, நடிகர் விஜய், தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு கமிட்டாவார். ஆனால், மாஸ்டர் படம் முடிந்ததும், அவர், ஒருபடத்தை முடித்து விட்டு, அடுத்தப் படத்துக்குச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். நடிகர் அஜித் பின் பற்றும் ஸ்டைல் இது. அதனால், நடிகர் அஜித் ஸ்டைலுக்கு விஜய் மாறுகிறார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.



Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'வலிமை' - தாமதமாகும் படப்பிடிப்பு'வலிமை' - தாமதமாகும் படப்பிடிப்பு விஜய்யின் ரசிகை நான்: செந்தில்குமாரி விஜய்யின் ரசிகை நான்: செந்தில்குமாரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27 ஜன, 2020 - 11:08 Report Abuse
Natarajan Ramanathan ஒரு நடிகனுக்கு அழகும் மிக முக்கியம். அதுஜோசப்விசய்க்கு சுத்தமாக கிடையாது
Rate this:
27 ஜன, 2020 - 10:57 Report Abuse
vijay vijay dont compare vijai to ajith vijay talented actor
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27 ஜன, 2020 - 10:18 Report Abuse
Natarajan Ramanathan கானமயிலாட கண்டிருந்த வான்கோழி.....
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
27 ஜன, 2020 - 02:44 Report Abuse
Allah Daniel குதிரையை பாத்து, கழுத்தை மேக் அப் போட்ட மாதிரி...
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
26 ஜன, 2020 - 20:40 Report Abuse
mindum vasantham unmayil அஜித்தை விட திறமையான நடிகர் விஜய் ஆனால் அய்யலூரை கும்பலிடம் சிக்கி உள்ளார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in