யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
தமிழக அரசியலில் இனி வரவிருக்கும் நாட்கள் மிக முக்கியமான நாட்கள். 2021ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை அரசியல் கட்சியினர் ஆரம்பித்து விடுவார்கள்.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்களின் சர்ச்சையும், அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியும் மேலும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே, ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றிய தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால் 2021ல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டாரா என்றும் சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் 168வது படத்திற்குப் பிறகு 169வது படத்துடன் சினிமாவுக்கு முழுக்குப் போட உள்ளாராம். 168வது படம் தீபாவளிக்கும், 169வது படம் 2021 பொங்கலுக்கும் வெளிவருமாம். அதன்பின் அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திப்பாராம். இதை தன்னை ரஜினிக்கு நெருக்கமான அரசியல் நண்பராக காட்டிக் கொண்டுள்ள ஒருவர், அவருடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
இது நிஜமாக நடக்குமா என்பதை ரஜினிகாந்த்தே சொன்னால் தான் உண்டு.