இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சுசீந்திரன். அவர், அந்தப் படத்தைத் தொடர்ந்து, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, வில் அம்பு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.
இயக்குநராக இருக்கும் சுசீந்திரன், சுட்டுப் பிடிக்க உத்தரவு என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சாம்பியன் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று(ஜன., 24) காலை அவர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். எதிரில் வந்த வாகனம் அவர் மீது மோதியதில், அவருடைய இடது கை தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு லேசர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். மூன்று வார கால ஓய்வுக்குப் பின், அவர் வீடு திரும்புவார் என கூறுகின்றனர்.