Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது - மறு தேர்தல் நடத்துங்க : ஐகோர்ட் அதிரடி

24 ஜன, 2020 - 15:06 IST
எழுத்தின் அளவு:
HC-canceled-nadigar-sangam-election

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ந் தேதி தேர்தல் நடந்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் நடந்தாலும் ஓட்டுக்களை எண்ண நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

பதவிக்காலம் முடிந்த 6 மாதத்திற்கு பின்னரே தேர்தல் நடத்தினர். ஏகப்பட்ட குளறுபடி உள்ளன. எனவே இந்த தேர்தலே செல்லாது என அறிவிக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.




எந்த முறைகேடும் நடக்கவில்லை, தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஓட்டு எண்ணிக்கை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் எல்லாம் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல கட்ட விசாரணைகள் நடந்த நிலையில் தீர்ப்பு இன்று(ஜன., 24) வழங்கப்படும் என நேற்று ஐகோர்ட் அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்தவும், அதுவரை சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளை அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி நிர்வகிப்பார் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி 168 பட தலைப்பு என்ன?ரஜினி 168 பட தலைப்பு என்ன? விபத்தில் சிக்கிய சுசீந்திரன் விபத்தில் சிக்கிய சுசீந்திரன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சுடலை கான் - gopalgardenpet,இந்தியா
28 ஜன, 2020 - 18:40 Report Abuse
சுடலை கான் நடிகர் சங்கமே செல்லாது..ன்னு தீர்ப்பு சொல்லுங்க எஜமான்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in