மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
விஜய், அஜித் இருவரது ரசிகர்களுக்கும் அவர்களது அபிமான நடிகரின் படம் தான் புதுப்புது சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பது பேராசை. முதல் பார்வை வெளியாவதிலிருந்து அந்தப் படங்கள் டிவியில் ஒளிபரப்பாவது வரை ஏதோ ஒரு சாதனை நிகழ வேண்டும் என்று நினைப்பார்கள். அதை வைத்துக் கொண்டு டுவிட்டரில் கடுமையாக சண்டையிட்டுக் கொள்வார்கள்.
2019ம் ஆண்டு வெளிவந்த அஜித் படமான 'விஸ்வாசம்' படத்திற்கும், விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' படத்திற்கும் இடையேயான சண்டை, ஆண்டு கடைசி வரை அடிக்கடி நடைபெற்று வந்தது. சரி, அந்த சண்டை இந்த 2020லாவது ஓயும் என்று பார்த்தால் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
'பிகில்' படத்தை கடந்த வாரம் பொங்கலை முன்னிட்டு டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பினார்கள். ஆனால், 'விஸ்வாசம்' டிவியில் ஒளிபரப்பான போது புரிந்த சாதனையை 'பிகில்' படம் எட்டிப் பிடிக்க முடியாமல் போய்விட்டது.
'பிகில்' படத்திற்கு 1,64,73,000 தடப் பதிவுகள் (Impressions) மட்டுமே கிடைத்துள்ளது. 'விஸ்வாசம்' படம் கடந்த வருடம் ஒளிபரப்பான போது 1,81,43,000 தடப் பதிவுகளைப் பெற்றது. இரண்டாமிடத்தைக் கூட பிடிக்க முடியாமல் 'பிகில்' ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்தது எதிர்பாராத ஒன்று.
1,76,96,000 தடப் பதிவுகளுடன் 'பிச்சைக்காரன்' இரண்டாவது இடத்திலும், 1,69,06,000 தடப் பதிவுகளுடன் 'சர்க்கார்' மூன்றாவது இடத்திலும், 1,67,66,000 தடப் பதிவுகளுடன் 'சீமராஜா' நான்காவது இடத்திலும் உள்ளன. இந்தப் படங்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தையே 'பிகில்' பிடிக்க முடிந்ததற்குக் காரணம் அன்றைய தினத்தில் மற்ற சேனல்களில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும்தான் காரணம் என்கிறார்கள்.