துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
படம் இயக்காமல் கிட்டத்தட்ட முழுநேர நடிகராக மாறிவிட்டார் இயக்குனர் அமீர். வெற்றிமாறன் இயக்கிய ‛வட சென்னை' படத்தில் ராஜன் என்று ரோலில் நடித்து பேசப்பட்டார். இப்போது வி.இசட்.துரை இயக்கத்தில் ‛நாற்காலி' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் ஒரு விருது விழாவில் பேசிய இவர், இந்தியாவில் உள்ள இயக்குனர்களில் வெற்றிமாறன் சிறந்தவர். அவர் தமிழராக இருப்பதில் நமக்கெல்லாம் பெருமை. அவர் இயக்கிய வட சென்னை படத்திற்கு 3 தேசிய விருதுகளாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களால் கிடைக்கவில்லை. இருப்பினும், அசுரன் படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க என நம்புகிறேன். அப்படி கிடைக்காவிட்டால் ஒட்டுமொத்த தேசிய விருதுகளையே நாங்கள் புறக்கணிப்போம் என்றார்.