Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்

23 ஜன, 2020 - 15:15 IST
எழுத்தின் அளவு:
Siddharth-angry-about-Fans-fight-in-social-media

சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டுவிட்டரில் இதுநாள் வரையில் தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகர்களுக்கு இடையில்தான் கடுமையான, கேவலமான சண்டைகள் நடக்கும். அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையேதான் அதுவும் அதிகமாக இருக்கும்.

அந்த ரசிகர்கள் சண்டை இப்போது மாநிலம் தாண்டியும் நடைபெற ஆரம்பித்துவிட்டது. 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' படத்தின் போஸ்டர்களை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள்.

உடனே, தனுஷ் ரசிகர்கள் 'ரியல் ஹீரோ தனுஷ்' என்ற ஹேஷ்டேக்குடன் 'அசுரன்' பட தனுஷ் தான் சிறப்பு. படத்தை ரீமேக்கெல்லாம் செய்யாதீர்கள் என்றனர். அதற்குப் பதிலடியாக 'நாரப்பா' படத்தின் நாயகனான வெங்கடேஷ் ரசிகர்கள் 'அசுரன் கா பாப் நாரப்பா' என்ற ஹேஷ்டேக்குடன் டிரெண்டிங் செய்தனர்.

இந்த சண்டை பின்னர் தமிழ் ஹீரோக்கள், தெலுங்கு ஹீரோக்களுக்கு இடையிலான சண்டையாக மாறியது. பல ஒப்பீடுகளை பரஸ்பரம் மீம்ஸ்கள் மூலம் பகிர்ந்தனர்.

'#TeluguRealHeroes, #UnrivalledTamilActors & #CrownLessKingsTELUGUHeros' என்றெல்லாம் டிரெண்டிங்கும் சண்டையும் நடந்தது.

இவற்றைப் பார்த்த நடிகர் சித்தார்த், “இன்றைய பைத்தியம் சேலஞ்ச் இது. இன்டர்நெட்டை எப்படி வீணாக்குகிறார்கள். இன்டர்நெட்டிலும், அவர்கள் வாழ்க்கையிலும் ஏதாவது செய்ய இந்த மாதிரியான இளைஞர்கள் நாட்டுக்கு வேண்டும்,” என்று கோபமாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் ... என்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள் என்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28 ஜன, 2020 - 19:19 Report Abuse
J.V. Iyer சித்தார்த் தான் ஒரு பெரிய அறிவாளி என்று நினைத்து கொண்டிருக்கிறார். என்ன செய்வது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in