Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன்

23 ஜன, 2020 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Arjun-interested-in-Malayalam-film

கர்நாடகாவை சேர்ந்த அர்ஜுன், அதிகம் நடித்தது தமிழ் படங்களில்தான். தெலுங்கிலும் நடித்திருக்கிறார். ஆனால் மலையாளத்தில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு ஜாக் அண்ட் டேனியல் படத்தில் திலீப்புடன் நடித்தார். அது வரவேற்பை பெற்றது. இதனால் தற்போது மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

பிரியதர்ஷன் இயக்கும் பிரமாண்ட சரித்திரப் படமான ‛அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்ற படத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார். இந்தப் படம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் கடல் மார்க்கமாக ஊடுருவதை எதிர்த்து போரிட்ட 4வது குஞ்சலி மரைக்காயர் என்ற குறுநில மன்னரின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகிறது. அவருக்கு உதவும் ஆனந்தன் என்ற தமிழ் குறுநில மன்னராக நடிக்கிறார் அர்ஜுன்.

தற்போது அர்ஜுனின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வருகிற மார்ச் 26ந் தேதி வெளியாகிறது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. மம்முட்டி நடித்து வெளியான சரித்திர படமான மாமாங்கம் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்று மோகன்லால் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம்என் குரலுக்கு நான் சொந்தக்காரன் ... இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in