துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
லைகா தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'தர்பார்' படம் கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வந்ததால் வசூல் ரீதியாக குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. இன்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் மேலும் சில வாரங்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரையில் உலகம் முழுவதும் மொத்தமாக 300 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள். நிகர தொகையாக 220 கோடியும், ஷேர் தொகையாக 150 கோடியும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது சமீப காலங்களில் வெளிவந்த ரஜினியின் முந்தைய படங்களை விட அதிகமான 'ஷேர்' என்பதால் வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் ஆகியோரை விட தியேட்டர்காரர்களுக்குத்தான் படத்தைத் தவிர மற்ற வித வருமானங்களான கேண்டீன், பார்க்கிங் ஆகியவற்றால் மேலும் சில லட்சங்கள் கிடைத்திருக்கும் என்பது கூடுதல் தகவல்.