பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ், நித்யாமேனன் நடித்துள்ள சைக்கோ படம் வருகிற 24ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு:
இந்த படம் ஒரு சைக்கோ பற்றிய படம் தான். ஆனால் நான் சைக்கோவாக நடிக்கவில்லை. சைக்கோவை தேடிச் செல்லும் ஒரு பார்வையற்ற இசை கலைஞனாக நடித்திருக்கிறேன். வழக்கமான உதயநிதியை இந்தப் படத்தில் பார்க்க முடியாது. இது குழந்தைகள் பார்க்க முடியாத ஏ படம். காரணம் இது மிஷ்கின் படம், உதயநிதியின் படம் அல்ல.
சைக்கோ படம் தொடர்பாக வந்த பிரச்னைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் படத்தின் தயாரிப்பாளரும் அல்ல. அது இயக்குனரின் பிரச்சினை. அது நீதிமன்றத்தில் இருக்கிறது. அவர் பார்த்துக் கொள்வார்.
அரசியலில் தீவிரமாக இருந்தாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். இரண்டு பணிகளுக்கும் தனித்தனி குழு அமைத்திருக்கிறேன். அவர்கள் அதனை கவனித்துக் கொள்வார்கள். அரசியல் கருத்துள்ள படங்களில் வலிந்து நடிக்க மாட்டேன். என் படங்களில் அரசியல் இருந்தால் தவிர்க்க மாட்டேன். அடுத்து மாறன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். எனது தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன்.
தாத்தாவின் (கருணாநிதி) வரலாற்றை ஏன் படமாக எடுக்கவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். அது அத்தனை எளிதான காரியம் இல்லை. எந்த தவறும், குறையும் இல்லாமல் அந்தப் படத்தை எடுத்து விட முடியுமா என்ற தயக்கம் இருக்கிறது. ஒரு நூற்றாண்டு சரித்திரம் அவரது வாழ்க்கை. பொருத்தமான நடிகர்கள் கிடைக்க வேண்டும். நல்ல இயக்குனர் வேண்டும். அப்படி அமைந்தால் கண்டிப்பாக தாத்தா படத்தை தயாரிப்பேன். இதுகுறித்து சில நிறுவனங்கள் என்னோடு பேசி வருகிறது. என்றார்.