Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தன் படத்தையே கண்டு கொள்ளாத சந்தானம்

22 ஜன, 2020 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Server-Sundaram:-Santhanam-Did-not-promote-his-movie

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக முன்னணியில் இருக்கும் போதே ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடித்து தன்னை ஹீரோவாக உயர்த்திக் கொண்டவர் சந்தானம்.

கொஞ்சம் தட்டுத் தடுமாறி ஹீரோவாக ஒரு இடத்தைப் பிடிக்க இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'தில்லுக்கு துட்டு 2, ஏ1' ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அவர் நாயகனாக நடித்துள்ள 'டகால்டி, சர்வர் சுந்தரம்' ஆகிய இரண்டு படங்களும் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளன. இதில் 'டகால்டி' படத்திற்கும் சந்தானம் தான் தயாரிப்பாளர். அவரது சொந்த நிறுவனம் தான் இப்படத்தைத் தயாரிக்கிறது. அதனால், இந்தப் படம் பற்றித்தான் அவர் தன்னுடைய டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரமோஷன் செய்து வருகிறார்.

ஆனால், மற்றொரு படமான 'சர்வர் சுந்தரம்' படத்தை அவர் கண்டு கொள்ளவேயில்லை. இத்தனைக்கும் சந்தானத்தின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். அதில் சந்தானம் கலந்து கொள்ளவேயில்லை.

தன்னை நாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் பல நெருக்கடிகளுக்குப் பின் படத்தை வெளியிடுகிறார். குறைந்தபட்சம் தன் டுவிட்டரிலாவது அந்தப் படம் பற்றிய ஒரு போஸ்டரைப் பகிர்ந்தால் சந்தானத்தின் இமேஜ் குறைந்து போய் விடாதே...?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நரப்பா - அச்சு அசல் அசுரன் காப்பிப்பா ?நரப்பா - அச்சு அசல் அசுரன் காப்பிப்பா ... கருணாநிதி வாழ்க்கையை படம் எடுக்க தயங்குவது ஏன்? உதயநிதி கருணாநிதி வாழ்க்கையை படம் எடுக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in