Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரலாற்றுப் படங்களில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்

21 ஜன, 2020 - 18:05 IST
எழுத்தின் அளவு:
I-will-act-in-historical-movie-says-Keerthy-suresh

வரலாற்றையும் கற்பனையையும் கலந்து, நூறு கோடி ரூபாய்க்கும் கூடுதலாக செலவிட்டு, மரைக்கார்: அரபிக்கடலின்றே சிங்கம் என்ற படத்தை எடுத்து வருகின்றனர். இந்தப் படத்தில் மலையாள பட உலகின் பிரபல நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படத்தில், தென்னிந்திய, பாலிவுட், பிரிட்டிஷ் மற்றும் சைனீஸ் நடிகர்களும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஆர்ச்சா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வேடம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில், மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து வருகிறார் கீர்த்தி. பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில், நடிகர் மோகன்லாலுடன் அவருடைய மகன் பிரணவ் மோகன்லாலும் இணைந்து நடிக்கிறார். மேலும், மஞ்சு வாரியார், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், சுனில் ஷெட்டி, சுஹாசினி, சித்திக் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமும் படத்தில் இணைந்துள்ளது. இவர்களைத் தவிர, பிரபல இயக்குநர் பாசிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம், வரும் மார்ச் 26ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது: வரலாற்று கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை; கனவு. மரைக்கார்: அரபிக்கடலின்றே சிங்கம் படத்தின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. ஆர்ச்சா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறேன். இயக்குநர் ப்ரியதர்ஷன் எப்படி விரும்புகிறாரோ, அதன்படியே படத்தில் நடித்து வருகிறேன். இந்தக் கேரக்டரும் படம் வெளியான பின் பேசப்படும். இப்படிப்பட்ட வித்தியாச கதையம்சம் உள்ள கதைகள் கிடைத்தால், தொடர்ந்து வரலாற்றுப் படங்களிலும் நடிப்பேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இப்ப வந்து மோதுடா; கிட்ட வந்து பாருடா - சூர்யா பாடல்இப்ப வந்து மோதுடா; கிட்ட வந்து பாருடா ... ரோட்டில் படுத்து உறங்கிய ரசிகர்: சந்தித்து ஆறுதல் கூறிய பூஜா ரோட்டில் படுத்து உறங்கிய ரசிகர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in