Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை முந்திய மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன்

20 ஜன, 2020 - 17:06 IST
எழுத்தின் அளவு:
Allu-Arjun,-Mahesh-babu-overtakes-Rajini

தென்னிந்தியத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு மார்க்கெட்டை அதிகப்படுத்தி அதன் வியாபாரத்தை உயர்த்தியவர் ரஜினிகாந்த் மட்டும்தான். அவருடைய படங்களுக்கு வெளிநாடுகளில் கிடைத்த வரவேற்புதான் இன்று அவருக்குப் பின்னால் ஹீரோக்களான பல நடிகர்களின் படங்கள் வசூலைக் குவிக்கின்றன.

இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த ஒரு படம் மட்டும் வந்திருந்தால் வெளிநாடுகளிலும் வசூல் தாறுமாறாக இருந்திருக்கும். ஆனால், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த 'சரிலேரு நீக்கெவரு', அல்லு அர்ஜுன் நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' ஆகிய படங்கள் வெளிவந்ததால் அந்தப் படங்கள் 'தர்பார்' வசூலை ஆட்டம் காண வைத்தன.

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் 'அலா வைகுந்தபுரம்லோ' அமெரிக்காவில் மட்டும் 19 கோடி வசூலையும், ஆஸ்திரேலியா, யுகே, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 4 கோடி வசூலையும் அள்ளின. 'சரிலேரு நீக்கெவரு' படம் அமெரிக்காவில் 14 கோடியையும், ஆஸ்திரேலியா, யுகே, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 2.5 கோடியையும் வசூலித்துள்ளன.

'தர்பார்' படம் அமெரிக்காவில் 11 கோடி, ஆஸ்திரேலியா, யுகே, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 5 கோடியையும் வசூலித்துள்ளன. 'தர்பார்' படத்தின் வசூல் அமெரிக்காவில் அனேகமாக நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.வரும் வார இறுதி நாட்களில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்படலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இறங்குமுகத்தில் 'தர்பார், பட்டாஸ்' படங்கள் வசூல் ?இறங்குமுகத்தில் 'தர்பார், ... கஸ்தூரி கோரிக்கை: அஜித் காது கொடுத்து கேட்பாரா ? கஸ்தூரி கோரிக்கை: அஜித் காது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Tamil - chennai,இந்தியா
21 ஜன, 2020 - 20:54 Report Abuse
Tamil பிள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடுவானாம். எந்த படமும் ரிலீசே அகா விடாம மாமனார் மருமகன் படம் ரெண்டும் மொத்த வசூலே குறைவுதானாம் . சும்மா உதார் விட்டு 200 கோடினு சொல்லுவான். நஷ்டம் ஆச்சுன்னா அடுத்த படம் சரி பண்றேன் அடுத்த படமும் சம்பளம் வாங்கிப்பான். அடுத்த படம் நடிக்க அவன் இருப்பானா சந்தேகம் தான். மொத்ததில்ல ராமசாமி குடுத்த பணம் ஊ ஊ ஊ தான்
Rate this:
Robins - Chennai,இந்தியா
21 ஜன, 2020 - 10:08 Report Abuse
Robins உங்கள் பொய்யை விட...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in