Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறங்குமுகத்தில் 'தர்பார், பட்டாஸ்' படங்கள் வசூல் ?

20 ஜன, 2020 - 17:00 IST
எழுத்தின் அளவு:
Darbar,-Pattas-collections-down

பொங்கல் விடுமுறை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது. தாங்கள் வேலை பார்க்கும், வாடகைக்கு குடியிருக்கும் ஊரைவிட்டு தங்களது சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த மக்கள், அவரவர் வேலையைப் பார்க்க இன்று திரும்பி வந்தனர்.

அதனால், இன்று பல தியேட்டர்களில் பொங்கலுக்கு வெளிவந்த இரண்டு படங்களான 'தர்பார், பட்டாஸ்' ஆகிய படங்களின் வசூல் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. பல தியேட்டர்களில் 10 டிக்கெட்டுகள் கூட முன்பதிவு செய்யப்படவில்லை. நேற்றுடன் அந்த இரண்டு படங்களுக்கான வசூல் முடிவடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

'தர்பார்' படம் 11 நாட்களையும், 'பட்டாஸ்' படம் 5 நாட்களையும் கடந்துவிட்டது. இனி வரும், நாட்களில் இந்தப் படங்களுக்கு எதிர்பார்க்கும் கூட்டம் வரவில்லை என்றால் சில கஷ்டம் தான். 'தர்பார்' படமாவது லாப கணக்கில் நுழைந்துவிட்டது. 'பட்டாஸ்' படத்திற்கு அப்படி அமைவது கடினம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
‛அவ்வை சண்முகி குழந்தை நட்சத்திரமா இது.?‛அவ்வை சண்முகி குழந்தை நட்சத்திரமா ... ரஜினியை முந்திய மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ரஜினியை முந்திய மகேஷ் பாபு, அல்லு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

21 ஜன, 2020 - 07:58 Report Abuse
Karthikeyan S Darbar 1st day வசூல்7000 theatres4 shows minimum400 seats average200 rupees ticket7000 x 4 x 400 x 200224 CroresCan anyone debate the collection
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
22 ஜன, 2020 - 13:33Report Abuse
RAMAKRISHNAN NATESAN   அப்பா கணித மேதை ராமானுஜர் இவர் , இது எப்படி என்றால் முதல் ஒவேரில் 20 ரன் அடிச்சவுடன் அந்த டீம் மேனேஜர் 20 over முடிவில் 400 வரும் என்ரறாராம் அனால் அந்த டீம் 105 il all out இதுமாதிரி தான் இவர் கணக்கு பாவம் டிஸ்ட்ரிபியூட்டர் / இதில் இவர் வேறு துக்ளக் மீட்டிங் வேலை காட்ட ஆரம்பித்து விட்டனர்...
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
27 ஜன, 2020 - 19:06Report Abuse
sankarதம்பி அவரு கொடுத்திருக்கிறது ஒரு நாள் கணக்கு இருநூத்தி இருபத்தி நாலு கோடி . படம் ஐநூறு கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் அதனால்தான் ரஜினியின் சம்பளம் உயருகிறது...
Rate this:
rajinidasan - Bangalore,இந்தியா
20 ஜன, 2020 - 17:34 Report Abuse
rajinidasan தமிழ் சினிமாவில் இன்றும் இளம் நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது ரஜினிகாந்த் தான். இவரின் படங்களுக்கு என்ன வரவேற்பு வரும் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் தர்பார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நடத்தி வருகின்றது, அதிலும் தமிழகத்தில் நல்ல வசூல் வந்துக்கொண்டு இருக்கின்றது. இதில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 11 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக நாம் தெரிவித்து இருந்தோம். இதன் மூலம் ரஜினி மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார், அது வேறு ஒன்றுமில்லை, எந்திரன், கபாலி, காலா, 2.0, பேட்ட என இதற்கு முன் 5 முறை ரூ 10 கோடி வசூலை சென்னையில் கொடுத்தவர் ரஜினிகாந்த். தற்போது தர்பார் மூலம் 6வது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்
Rate this:
rajinidasan - Bangalore,இந்தியா
20 ஜன, 2020 - 17:33 Report Abuse
rajinidasan தர்பார் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. ஆம், முருகதாஸ் இயக்கத்தில் இந்த பொங்கல் விருந்தாக வந்த தர்பார் செம்ம வசூல் சாதனை செய்து வருகின்றது. தர்பார் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல் செய்து வர, கர்நாடகாவில் இப்படம் தற்போது வரை ரூ 18 கோடி வசூல் செய்துவிட்டதாம். இதன் மூலம் ரஜினியின் பேட்ட படத்தின் வசூலை தர்பார் முந்தி சாதனை படைத்துள்ளது, தர்பார் இதன் மூலம் கர்நாடகாவில் நல்ல லாபத்தை பெற்றுள்ளது. மேலும், இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Rate this:
rajinidasan - Bangalore,இந்தியா
20 ஜன, 2020 - 17:33 Report Abuse
rajinidasan தர்பார் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இந்நிலையில் அரபு நாட்டில் ஆங்கிலப்படங்களையே பின்னுக்கு தள்ளி தர்பார் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளது. இதுநாள் வரை அங்கு இப்படம் சுமார் ரூ 15 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம், இன்னும் இப்படத்திற்கு நல்ல கூட்டம் இருந்து வருகின்றது. எப்படியும் அங்கு ரூ 20 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.
Rate this:
rajinidasan - Bangalore,இந்தியா
20 ஜன, 2020 - 17:30 Report Abuse
rajinidasan தர்பார் வசூல் வேண்டுமென்றே குறைத்து சொல்லப்படுகின்றதா? பின்னால் இருப்பவர்கள் யார்? தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களை தர்பார் படம் மிகவும் கவர்ந்து இழுத்துள்ளது, தற்போது வரை திரையரங்குகளுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர். அப்படியிருக்க தமிழகம் தாண்டி மற்ற அனைத்து இடங்களிலும் தர்பார் படத்தின் வசூல் துல்லியமாக கூறிவிட்டனர். அதிலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் மட்டும் தர்பார் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. அப்படியிருக்க தமிழகத்தில் தர்பார் 7 நாட்கள் முடிவில் வெறும் ரூ 54 கோடி தான் வசூல் என்று ஒரு தகவல் இணையத்தில் உலா வருகின்றது. இதற்கு பல ரஜினி ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர், அதோடு, சென்னையில் மட்டும் ரூ 10 கோடியை எட்டியுள்ள தர்பார் மத்த அனைத்து இடங்களிலும் சேர்த்து ரூ 44 கோடி தான் வந்ததா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தர்பார் சிட்டியில் மட்டும் தான் ஓடுகிறதா என்றால், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் வரை இப்படம் முதல் 4 நாட்கள் நல்ல கூட்டம் தான். திங்கள், செவ்வாய் கொஞ்சம் கூட்டம் குறைவு தான் என்றாலும், பொங்கல் நாளான நேற்று முதல் நாளுக்கு இணையான கூட்டம் வந்து தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள். எப்படியும் நேற்று மட்டுமே ரூ 10 கோடி வசூலை தர்பார் எட்டியிருக்க வேண்டும் என்பது தான் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும், ஆனால், இவர்கள் சொன்ன கணக்குப்படி பார்த்தால் 8 கோடி கூட வரவில்லை என்பது போல் கூறி வருகின்றனர். இப்படி தொடர்ந்து ரஜினி படங்களுக்கு வசூலில் குறிப்பாக தமிழகத்தில் முரண்பாடான கருத்துக்கள் இருப்பது பலருக்கும், இதற்கு பின்னால் யாரும் இயங்குகிறார்களா? என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்ற சொன்ன பிறகு தான் தொடர்ந்து இப்படி வசூல் சர்ச்சை இருந்து வருகின்றது. தயாரிப்பாளர் தரப்பே அதிகாரப்பூர்வமாக ரூ 150 கோடி 4 நாட்களில் என்று சொன்னால், ஒரு சில பாக்ஸ் ஆபிஸ் தளங்கள் அதுவும், ஆந்திராவை சேர்ந்த தளங்கள் இன்னும் வசூலை குறைத்து தான் கூறி வருகின்றனர். எது எப்படியோ தர்பார் பல திரையரங்க உரிமையாளர்களே முன்வந்து மெகா ஹிட், நல்ல வசூல் என்று கூறி வருகின்றனர்,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in