கமல் மகள் ஸ்ருதிக்கு கருப்பை வீக்க பாதிப்பு | ‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் |
மகாநடி படத்திற்கு பிறகு ஹிந்தியில் போனிகபூர் தயாரிப்பில் அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில் அவரது மனைவியாக நடிக்க கமிட்டாகியிருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிமாகியிருந்தார். ஆனால் அவர் கால்சீட் கொடுத்திருந்த நாளில் படப்பிடிப்பு நடத்தவில்லையாம். இதனால் அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடிக்க கால்சீட் கொடுத்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.
அதோடு, அஜய்தேவ்கனுக்கு மனைவியாக நடிப்பதால் கீர்த்தி சுரேஷின் யூத் இமேஜ் போய்விடும் என்று பலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதனால் இந்த சந்தர்ப்பத்தை வைத்து, தான் கொடுத்த கால்சீட்டை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லி அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் கீர்த்தி சுரேஷ்.
அதனால் இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கயிருந்த அஜய்தேவ்கானின் மனைவி வேடத்தில் நடிக்க பருத்தி வீரன் பிரியாமணி ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு, ரக்தசரித்ரா, ராவண் என சில ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.