நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் கைதானார் மலையாள நடிகர் திலீப். பின், அவர் ஜாமீனில் வெளி வந்து வழக்கை நடத்தி வருகிறார். வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்கவேண்டும் என, தொடர்ந்து போராடி வருகிறார் திலீப். இந்நிலையில், திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
முன்விரோதம் காரணமாக, நடிகையைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய வழக்கி,ல் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார் நடிகர் திலீப். குற்றத்தில் ஈடுபட்டவர்கள், அந்த சம்பவத்தை வீடியோ எடுத்தபோது, நடிகர் திலீப், குற்றத்தில் தொடர்புடையவர்களுடன் பேசி இருக்கிறார். இதற்கான ஆதாரம், இந்த வழக்கின் முக்கிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
இந்த ஆதாரத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், அதை, அரசு சாரா தனியார் நிறுவனங்களின் மூலம் அதிதொழில்நுட்பம் வாய்ந்த முறையில் பரிசோதனை செய்ய வேண்டும் என, திலீப் தரப்பில் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையடுத்து, Central Forensic Laboratory(CFSL) என்ற நிறுவம் மூலம், அந்த வீடியோ ஆதாரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திலீப் மற்றும் இதர குற்றவாளிகளின் குறுக்கு விசாரணை கொச்சியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வேகமாக நடந்து வருகிறது.
இதனால், அந்த விசாரணையை வேகமாக நடக்க விடாமல் செய்யும் முயற்சியாக, CFSL அறிக்கை வரும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என, நடிகர் திலீப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர், திலீப் தரப்பு மற்றும் போலீஸ் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.
திலீப் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, CFSL அறிக்கை வந்தபின் தான், எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய முடியும். எனவே, அதுவரையில் இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். குற்றம் செய்யாத என் கட்சிக்காரருக்கு சாதகமாகவே, அறிக்கை வரும். அதன்பின், இந்த வழக்கே இருக்காது. ஆனால், அதற்கு முன், விசாரணையைத் தொடர்ந்தால், தேவையில்லாத மன உளைச்சலுக்கு, என் கட்சிக்காரர் ஆளாக நேரிடும் என வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் வாதாடியவர், ஏற்கனவே, கேரள உயர் நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்பட்டே, இந்த வழக்கில் திலீப்பும் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு, அவரை சிறையிலும் அடைத்தனர். அங்கு, 85 நாட்களை கழித்துவிட்டு, இப்போது ஆதாரங்களின் மீது சந்தேகத்தை உருவாக்கி, வழக்கின் வேகத்தை தடை செய்கின்றனர். விசாரணையை தாமதப்படுத்துவது, குற்றவாளிகள் தப்பிக்க வழிகொடுக்கும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கன்வில்கர், இரு தரப்பு வாதங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவையாகவே இருக்கின்றன. மனுதாரர் தரப்பில் சொல்லப்படுவதுபோல, CFSL அறிக்கையில் இருப்பதைப் பொறுத்து, இந்த வழக்கு திசை மாறுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. அதேசமயம், அரசு தரப்பில் குறிப்பிடுவது போல, விசாரணையை தாமதப்படுத்துவது, குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கலாம். ஆனால், இதில் திலீப் மட்டுமே குற்றவாளி இல்லை என்பதால், அவரைத் தவிர்த்து, மற்ற குற்றவாளிகளின் குறுக்கு விசாரணையை கொச்சி சிறப்பு நீதிமன்றம் தொடரலாம். CFSL அறிக்கை வந்தபின், அதை அடிப்படையாக வைத்து, திலீப்பிடம் விசாரணை நடத்துவது சரியாக இருக்கும் என, தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.
இது நடிகர் திலீப்புக்கு கிடைத்த இடைக்கால தீர்வாக பார்க்கப்படுகிறது.