Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடியை நிறுத்தினேன்; மீண்டு விட்டேன்: விஷ்ணு விஷால் உருக்கம்

17 ஜன, 2020 - 18:59 IST
எழுத்தின் அளவு:
Vishnu-Vishal-heartful-letter-to-fans

நடிகர் விஷ்ணு விஷால், பல பிரச்னைகளுக்கு மத்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியாது. அந்தப் பிரச்னைகளையெல்லாம், அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலம், இப்போது வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி இருக்கிறார். ரசிகர்களுக்கான கடிதமான தன்னுடைய சங்கடங்களை எல்லாம் அவர் பட்டியலிட்டுக் கூறியிருக்கிறார். அவர் ரசிகர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள ரசிகர்களுக்கு...

நான் என்னைப் பற்றிய சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இத்தனை ஆண்டுகால வாழ்க்கை பலரைப் போலவும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், கடைசி இரண்டு ஆண்டுகள் மிகுந்த கடினமான ஒன்றாகவும், இருள் நிறைந்த பகல்களும், இரவுகளும் நிறைந்ததாக இருந்தது. அவற்றைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் இதுவென கருதுகிறேன்.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தபோது, என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை சீரழிந்தது. 2017ல், நானும், என் மனைவியும் 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கையை முறித்துக் கொண்டோம். இரண்டு வீடுகளில் வாழ்ந்தது மட்டும் எனக்கு ஏற்பட்ட துயரமல்ல; பிறந்து, சில மாதங்களே ஆகியிருந்த என் மகனையும் நான் பிரிய நேர்ந்தது. என் வாழ்க்கை இப்படி மாறும் என நினைத்ததே இல்லை. குடிகாரனாக மாறினேன். ஒவ்வொரு இரவும், நான் உடைந்துபோகும் வரை குடித்தேன். அந்த நாட்கள் மோசமாக மாறின. மன அழுத்தமும் தூக்கமின்மையும் என்னை உடலளவில் நோயாளியாக மாற்றியது. சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


மோசமான நாட்களில் படத்தை ரிலீஸ் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். நான் உருவாக்கியிருந்த தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது. அதனால் பண நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் என் சொந்த தயாரிப்பில் தயாரான திரைப்படத்தை 21 நாள் ஷூட்டிங்குக்குப் பின், கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் விட, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நான் நடித்த காடன் திரைப்பட ஷூட்டிங்கின் போது, விபத்தில் சிக்கி இரண்டரை மாதம் கட்டிலில் கிடந்தேன். அதனால் 11 கிலோ எடை அதிகமானேன்.

ராட்சஸன் இல்லாமல் எட்டு சிறந்த இயக்குநர்களுடன் இணையக் காத்திருந்த கதைகள், என் கையைவிட்டுச் சென்றன. விவாகரத்து, குழந்தையிடமிருந்து பிரிந்தது, உடல் நோய், பண நெருக்கடி, காயம், குடி, உணவுப் பிரச்சினை மற்றும் என் எடை கூடியது என அடி மட்டத்துக்குச் சென்று விட்டேன். உதவ யாருமில்லாமல், ஏதோ ஒரு உலகத்தில் கிடப்பது போல இருந்தேன். அதனால், என் அப்பா ரிட்டையர் ஆனது கூட தெரியாமல் போனது. என் பிரச்னைகளில், நான் உழன்று கொண்டிருந்தது, என் குடும்பத்தையும், குறிப்பாக என் தந்தையை எப்படி பாதித்தது என்பதை நான் கவனிக்கவில்லை. அவரது கையறு நிலையைக் கண்டபோது, என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

உதவி கேட்டுச் சென்றேன். மன அழுத்தத்தை சரி செய்ய சிகிச்சை மேற்கொண்டேன். எனக்குள் ஒரு சக்தி கிடைக்க உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். சத்தான உணவுகளை உண்ணத் தொடங்கினேன். குடியை நிறுத்தினேன். யோகா செய்யத் தொடங்கினேன். முன் முடிவுகளோடு பழகுபவர்களை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்தேன். எதிர்மறையாக சிந்திப்பவர்களை பிளாக் செய்தேன். வீட்டில் இருப்பவர்களுடன் அதிக நேரம் செலவிட்டேன். நேர்மறை எண்ணமுடைய நண்பர்களுடன் மட்டும் பழகத் தொடங்கினேன்.

காயம் ஏற்பட்ட பின், உடற்பயிற்சி செய்யவே கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் ஜிம்முக்குப் போனேன். முதல் நாள் என்னால் ஒரு புஷ்-அப் கூட எடுக்க முடியவில்லை. ஆனால், 6 மாதம் கழித்து இப்போது 16 கிலோ எடை குறைவாக வலிமையாக, எனது அடுத்த நான்கு படங்களுக்குத் தயாராகி விட்டேன். என்னைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டு பலர் இருக்கலாம். உங்களுக்கெல்லாம் நான் சொல்ல நினைப்பது ஒன்று தான். நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பி எழலாம். நேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் உங்களைக் காப்பாற்றும்.

இவ்வாறு அவர், அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
பிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யாபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி ... தமிழுக்கு மீண்டும் வருகை! தமிழுக்கு மீண்டும் வருகை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Sri,India - India,இந்தியா
18 ஜன, 2020 - 13:11 Report Abuse
 Sri,India மது போதைக்கு எதிராக இவரால் பிரச்சாரம் செய்ய முடியுமா?? இவர் படத்திலாவது மது போதைக்கு எதிராக பேசுவாரா??
Rate this:
vns - Delhi,இந்தியா
18 ஜன, 2020 - 12:27 Report Abuse
vns நடிகன் என்றால் அது சிவாஜி மட்டுமதான்... விஷ்ணு விஷால் எல்லாம் கூத்தாடிகள்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 ஜன, 2020 - 11:21 Report Abuse
skv srinivasankrishnaveni justlike that துவங்கும் இந்த பமனுஷனை எல்லாம் இலக்கச்செய்து மானம் மரியாதைக்கேட்டு வாழ்க்கையை தொலைச்சு மதிகெட்டு அலையவைக்கும்போது திருந்தர்வன் தான் மனுஷன் திருந்தாலே என்றால் நடைப்பிணம் தான் அவனுக்கு குடியை ஆளா க்கியபாதகங்களேகூடவிளக்கிடுவாங்க இது உண்மை , போதை ஏறினாள் செய்றா அநியாயம் எவ்ளோ கணக்கிலடங்காதுய்யா மனைவியும் (காதலிச்சு மணந்தாலும் )டிவோர்ஸ்லே முடியுதே இந்த குடியால் (டாஸ்மாக் நீரோ வெளிநாட்டுசிறுநீரோ )போதைக்குன்னுகுட்டிச்சு வாய்ருவெந்து சாவுதுங்களே
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 ஜன, 2020 - 09:29 Report Abuse
skv srinivasankrishnaveni மனம் திருந்தி வாழவரும் உனக்கு இனி எல்லாம் இனிதுதான் ஐயா
Rate this:
Dv Nanru - mumbai,இந்தியா
18 ஜன, 2020 - 09:06 Report Abuse
Dv Nanru குடியை நிறுத்தியினாய் சரி ஏன் சட்டை போடாமல் முண்டமாய் இருக்கிறாய் போயி சட்டையை போட்டுவா ... அது தான் நாகரிகம்..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 ஜன, 2020 - 16:15Report Abuse
skv srinivasankrishnaveniஇப்படிக்காட்டினால் தனக்கு சான்ஸ் கிட்டுமோ என்ற ஒரு ஆசையேதான் காரணம் பொண்ணுகளே அசிங்கமாகாட்டிண்டு திரியுறாளுங்க சான்ஸ்கிட்டுமான்னு அதுபோலஇவனும் நிக்கிறான்...
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in