நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி | 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து |
அறிமுக இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணி எழுதி, இயக்கும் படம் டாணா. இந்தப் படத்தில், நடிகர் வைபவ் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக விரும்பும் ஒருவனுக்கு, திடீரென்று கம்பீரக் குரல் மாறி, பெண் குரலில் பேசத் தொடங்கினால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை.
ஆண்களுக்குப் பெண் குரல் இருப்பதும், பெண்களுக்கு ஆண் குரல் இருப்பதும் என இதை அடிப்படையாக வைத்து, தமிழ் சினிமாவில் நிறைய கதைகள் பண்ணி விட்டார்கள். இருந்தபோதும், இந்த படத்தின் கதை, வழக்கமான கதையாக இருக்காது; கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறார் யுவராஜ் சுப்பிரமணி.
வரும் 24ல், வெளியாக இருக்கும் டாணா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதே நாளில், இயக்குநர் மிஷ்கினின் சைக்கோ படமும் ரிலீசாக இருப்பதால், டாணா படம், சைக்கோவுக்கு கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, பாண்டியராஜன் மற்றும் பலர் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை நோபல் மூவிஸ் தயாரிக்கிறது. குற்றம் 23, ஜில் ஜங் ஜக், ரங்கூன், சிம்பா, காளிதாஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.