Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா ராய் தான் என் அம்மா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சங்கீத்குமார்

16 ஜன, 2020 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rai-is-my-mom-32-year-old-youth-claims-again

யாருக்கு, யாரால், எப்போது, எங்கிருந்து பிரச்னை கிளம்பும் என்றே தெரியாது. அப்படித்தான், இன்று பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு, மங்களூரைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் திடுமென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். என்னுடைய அம்மா நடிகை ஐஸ்வர்யா ராய் என்று.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த 1988ல், நடிகை ஐஸ்வர்யா ராய், செயற்கை கருத்தரிப்பு மூலம் லண்டனில் வைத்து என்னை பெற்றெடுத்தார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. அதன் பின், 19 ஆண்டுகளுக்குப் பின், தன்னுடைய 34வது வயதில், 2007 ஆம் ஆண்டு, நடிகர் அபிஷேக் பச்சனை அவர் திருமணம் செய்து கொண்டார். என்னையும், என்னுடைய அம்மா ஐஸ்வர்யா ராயையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும். என்னுடைய அம்மாவின் பிரிவை நான் ரொம்பவே துன்பமாக உணர்கிறேன். என்னுடைய அம்மாவுடன் தான் வசிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக அமிதாப்பச்சன் குடுபத்தினர் பெரிய அளவில் எதிர்வினையாற்றவில்லை. இந்நிலையில், மீண்டும் சங்கீத்குமார் பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கிறார்.

இம்முறை அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய இரு வயது வரை, தாத்தா கிருஷ்ணராஜும், பாட்டி பிருந்தாவும் தான் வளர்ந்து வந்தனர். அதன்பின், என்னுடைய அப்பா வடிவேலு ரெட்டி, என்னை, விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கு தான் வளர்ந்தேன். என்னுடைய பிறப்பு சான்று உள்ளிட்ட என் சம்பந்தப்பட்ட சான்றுகளை உறவினர்கள் தவறுதலாக அழித்து விட்டனர். ஆனாலும், என்னுடைய தாய் ஐஸ்வர்யா ராய் தான். நான் எப்படியும் அவரோடு சேர வேண்டும். அவருடன் தான் நான் இருப்பேன் என கூறியிருக்கிறார்.

இந்தப் பேட்டிக்குப் பின்னும், ஐஸ்வர்யா ராயோ, பச்சன் குடும்பத்தினரோ, எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கின்றனர். இதுதான் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
தனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னாதனது நோக்கத்தை அடைந்து விட்டது ... ஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ் ஹிந்தி பொல்லாதவன்; பிப்., 28ல் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Nathan - Hyderabad,இந்தியா
22 ஜன, 2020 - 16:34 Report Abuse
Nathan என்னய்யா தடவிக்கிட்டு, இப்பதான் DNA டெஸ்டு வந்திருச்சுல, அதுல தாங்கும் தாய் வராது, அத வெச்ச்சு இவன் லவுட்ட பார்க்கிறான், அயோக்கிய முகமா இருக்கு, அப்பாவியா, யாரு கிளப்பி விட்டார்களோ,
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19 ஜன, 2020 - 15:57 Report Abuse
Endrum Indian 15 வயதில் செயற்கை கருத்தரிப்பு??ஒரு 35 வயதில் குழந்தை இல்லாம இருக்கும் தம்பதிகள் என்னும் போது என்று சொன்னால் கொஞ்சம் பொருத்தமா இருக்கும்???இதிலிருந்து தெரிவது இவன் எப்படியாவது அவளிடமிருந்து பணம் கறக்க முடிவு செய்து இப்படி இறங்கியிருக்கின்றான் என்று அவ்வளவே சொல்ல முடியும் இந்த மாதிரி ஆட்களின் செயலை பார்த்தால்
Rate this:
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
18 ஜன, 2020 - 09:28 Report Abuse
Muthukrishnan,Ram ஒரு பெண்ணுக்கு ௧௫ வயதில் கர்பப்பை வளர்சசி அடையாது. எந்த மருத்துவரும் கருத்தரிப்பு செய்ய மாட்டார்கள். அந்த வயதில் ஐஸ்வர்யா அம்மணி பத்தாம் வகுப்பு படித்து கொண்டிப்பார். ஆகவே அந்த தாயில்லா பிள்ளையை நல்ல மனோதத்துவ மருததுவரிடம். காட்டினாலே போதும். சரியாகிவிடுவார்.
Rate this:
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
18 ஜன, 2020 - 09:01 Report Abuse
Nallavan Nallavan அப்பா பேரு வடிவேலுவா ???? அவரு எப்போ ஐஸ்வரியாவைச் சந்திச்சாரு ???? குழப்பமா இருக்கே ......
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 ஜன, 2020 - 05:40 Report Abuse
skv srinivasankrishnaveni தனுஷுக்கு பிடிச்ச அஷ்டமத்து சனியன் இப்போது ஐஸ்வர்யாராயிக்கா
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in