Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2வுக்குப் பின் என் இமேஜ் உயரும்: காஜல்

15 ஜன, 2020 - 14:48 IST
எழுத்தின் அளவு:
My-image-will-increase-after-indian-2-release-says-Kajal

மும்பையில் நடந்த ஒரு கண்காட்சியில் கலந்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, இந்தியன் 2 படம் வெளி வந்த பின், தன்னுடைய இமேஜ் பல மடங்கு உயரும் என கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குநர் ஷங்கர் என்னை அழைத்த போது, எனக்கு என்ன வேடம் கொடுக்கப் போகிறாரோ என்ற பதற்றம் இருந்தது. அதன் பின் தான் தெரிந்தது. எனக்கு 85 வயது முதிர்ந்த கிழவியின் வேடம் என்று. இதில் நம்மால் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற தயக்கம் முதலில் இருந்தது. தற்போது அந்த தயக்கமெல்லாம் போய் விட்டது. காரணம் - அந்தப் படத்தில் நடிகர் கமல் நடிக்கும் கேரக்டருக்குப் பின், பேசப்படும் கேரக்டராக அது இருக்கும் என்பது தெரிந்து விட்டது. அதனால்தான், அந்த கேரக்டருக்காக நிறைய சிரத்தை எடுத்து நடிக்கிறேன்.

மேக் - அப்புக்கு மட்டும் பல மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இருந்தாலும், அதில் அவ்வளவு கவனம் செலுத்துதற்கான காரணம் - படத்தில் அந்த கேரக்டர் ரொம்பவும் முக்கியமானது என்பதால்தான். படத்தின் அடுத்த கட்ட சூட்டிங், வரும் பிப்ரவரியில் துவங்குகிறது. படம் மிகப் பிரம்மாண்டமாக வரும் என்பது மட்டும் உறுதி. படம் குறித்து, வேறு எந்தத் தகவல்களையும் இயக்குநர் ஷங்கர் வெளியே சொல்லக் கூடாது என கேட்டுக் கொண்டிருப்பதால், வேறு எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் செல்லும் ஒத்த செருப்பு: பார்த்திபன் தகவல்ஹாலிவுட் செல்லும் ஒத்த செருப்பு: ... ராஷ்மிகாவுடன் கைலாசா தீவில் செட்டில் ஆவேன்: ஹரிஷ் ராஷ்மிகாவுடன் கைலாசா தீவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aarkay - Pondy,இந்தியா
15 ஜன, 2020 - 15:36 Report Abuse
Aarkay வயதாகிவிட்டது. அக்கா ரோல்களுக்கு முயற்சிக்கலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in