Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் செல்லும் ஒத்த செருப்பு: பார்த்திபன் தகவல்

15 ஜன, 2020 - 14:02 IST
எழுத்தின் அளவு:
OS-7-may-be-made-in-Hollywood-says-Parthiban

சமீபத்தில் இயக்குநரும்; நடிகருமான பார்த்திபனின் முயற்சியில் எடுக்கப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஒத்த செருப்பு சைஸ் 7. முழுக்க முழுக்க தனிமனிதன் ஒருவனது பார்வையில் செல்லும் கதையில் மாசிலாமணி என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் தோன்றியிருந்தார். படம் முழுக்க ஒரே ஒரு கேரக்டரே இடம் பெற்றிருந்தது.

பார்த்திபனின் இந்த முயற்சியை இந்தி நடிகர் ஆமிர் கான், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் ரஜினி உள்ளிட்ட பலரும் படத்தை பாரட்டி இருந்தனர். இந்தப் படம் முக்கியமான விருதுகளையும் பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தன்னையும் அழைத்து பாராட்டுவர்; தன்னுடைய படத்துக்கு விருது வழங்குவர் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார் பார்த்திபன். ஆனால், அந்நிறுவனம், பார்த்திபன் படத்தை கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு டுவிட்டர் மூலம் வேதனையை தெரிவித்தார். இதையடுத்து, டுவிட்டர் மூலமாகவே, பார்த்திபனுக்கு, அவருடைய ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

அதில் ஒரு ரசிகர் பார்த்திபனிடம், ஹாலிவுட்டில் ஒத்த செருப்பு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கு பதிலளித்த பார்த்திபன், பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார். ஏற்கனவே பாலிவுட்டில் நவாசுதின் சித்திக் நடிக்க, ஒத்த செருப்பு படத்தை இயக்க தயாராகி வரும் நிலையில் அடுத்ததாக, ஒத்த செருப்பு படம் ஹாலிவுட்டுக்கும் செல்ல சூழல் உருவாகி இருப்பது, தமிழ் திரைப்பட உலகினரை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பனிமலையில் அக்னிச் சிறகுகள்பனிமலையில் அக்னிச் சிறகுகள் இந்தியன் 2வுக்குப் பின் என் இமேஜ் உயரும்: காஜல் இந்தியன் 2வுக்குப் பின் என் இமேஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in