Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகா செயலுக்கு எதிர்ப்பு; பாதியில் நிறுத்தப்படும் விளம்பரங்கள்

15 ஜன, 2020 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Deepika-padukone-ads-disappearing-from-Television

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்னை பெரிய விவாதப் பொருளானது. இந்நிலையில், அரசியல் தலைவர்களுக்கு முன், பாதிக்கப்பட்ட மாணவர்களை சென்று சந்தித்தார் நடிகை தீபிகா படுகோன். அவர்களுக்கு தன்னுடைய ஆதரவையும் தெரிவித்தார். இது நடந்த சில நாட்களிலேயே அவரது சொந்தப் படமான சப்பாக் படம் ரிலீசானது.

இதெல்லாம் தன்னுடைய படத்துக்கு கைகொடுக்கும் என நினைத்திருந்த தீபிகாவுக்கு, எதிர்மறையான ரிசல்ட் கிடைத்திருக்கிறது. படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. இதற்குக் காரணம், அவருடைய செய்கைகளுக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்கள் தான். தீபிகா, இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு பிராண்டு அம்பாசிடராக இருந்து வருகிறார். எண்ணற்ற டி.வி., விளம்பரங்கள், பொருட்களின் மீது அச்சடிக்கப்பட்ட படங்கள், என ஹாலிவுட்டுக்கு நடிக்கச் சென்று வந்த பின், தீபிகாவின் பிராண்டு வேல்யூ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சென்றிருந்தது.

ஆனால், தன்னுடைய ஒரு நடவடிக்கையால், மொத்தமாக இது அனைத்தையும் இழக்கக் கூடிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். அதற்கு மிக முக்கிய காரணம், அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கடும் விமர்சனங்கள்தான். தீபிகா இடம்பெறும் விளம்பரங்களின் பிராண்டுகளைப் புறக்கணிப்போம் என்றே, வேகமாக வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

இதனால், தற்காலிகமாக தீபிகா படுகோனை வைத்து எடுக்கப்பட்ட எந்த விளம்பரத்தையும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த நிறுவனங்கள், உடனடியாக அதை நிறுத்தியும் விட்டன. சமீபத்தில், மத்திய அரசின் விளம்பரம் ஒன்றிலும் நடித்திருந்தார் தீபிகா. அந்த விளம்பரத்தையும் வெளியிட வேண்டாம் என முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு அதிகாரிகள், அதே விளம்பரத்தை, வேறு நடிகையை வைத்து எடுத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை  மீடூ புகார்தயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை ... தனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்: மேக்னா தனது நோக்கத்தை அடைந்து விட்டது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

S.Ganesan - Hosur,இந்தியா
19 ஜன, 2020 - 11:52 Report Abuse
S.Ganesan இங்கே இல்லை என்றால் என்ன இங்கிலீஸ் படத்தில் அரைகுறை உடையுடன் நடிக்க போய் விடுவார்கள். இவர்களுக்கு காசு, விளம்பரம்தான் முக்கியம்
Rate this:
oce - tokyo,ஜப்பான்
18 ஜன, 2020 - 14:49 Report Abuse
oce போதும் போம்மா.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஜன, 2020 - 05:10 Report Abuse
meenakshisundaram இவரை பார்த்தாலே 'முத்தின மான் 'அல்லது ஆண் போலவே இருக்காரு ,கவர்ச்சி போயி பல வருஷங்கள் ஆகின ,இன்னும் என்ன வேண்டிக்கிடக்கு?
Rate this:
Ray - Chennai,இந்தியா
17 ஜன, 2020 - 04:41 Report Abuse
Ray சினிமாவுக்கு மாணவர்களே பிரதானமல்லவா?அதான் பெரிய சூப்பர் ஸ்டார் எல்லாம் அவரவர் பிழைப்பைத்தான் பார்க்கிறார்கள் பாவம் இந்த பாமர ரசிகர்கள்தான் இந்த பாம்புகளுக்கு பாலபிஷேகம் செய்து துஞ்சி மடிகிறார்கள்
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
16 ஜன, 2020 - 19:17 Report Abuse
கல்யாணராமன் சு. பிராண்டு அம்பாஸடர்னு இருந்தவரை பிராண்டிட்டாங்களோ ???
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in