Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹரிவராசனம் விருது பெற்றார் இளையராஜா

15 ஜன, 2020 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-got-harivarasanam-award

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கேரள அரசு கவுரவித்தது. சபரிமலை தேவசம் போர்டும், கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதினை இதற்கு முன்னதாக, கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதினை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று (ஜன.,15) விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், Worshipful Music Genius என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு விருது வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே இளையராஜா, சன்னிதானத்தில் ஐயப்பனையும் சுவாமி தரிசனம் செய்தார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலும், சமுதாயமும் கெட்டுப்போய் உள்ளது: ரஜினிஅரசியலும், சமுதாயமும் கெட்டுப்போய் ... காவலர்கள் குடும்பத்துக்காக தர்பார் படம் சிறப்புக் காட்சி காவலர்கள் குடும்பத்துக்காக தர்பார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன, 2020 - 14:43 Report Abuse
shoba Long Live Raja
Rate this:
n.palaniyappan - karaikal ,இந்தியா
15 ஜன, 2020 - 19:24 Report Abuse
n.palaniyappan N.Palaniyappan கறைகள் எல்லா புகழுக்கும், விருதுக்கும் தகுதியானவர். அவர் புகழ் உலகம் அறிந்தது. அவர் இசையின் மீதிருந்த ஈடுபட்டால் இன்றும் அவர் இனிய பாடல்களையும், திரை இசையையும் வழங்கி வருகின்றார். பழைய டைரக்டர்களிடம் இவர் இணைந்து வழங்கிய இசையும் பாடல்களும் இனிமையான தருணம் அது. ராஜா சார் பழைய டைரக்டரிடம் இணைந்து பல படங்கள் தந்து உங்கள் உலகலாவிய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in