Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கைப்பையே பல லட்சம் : கரீனாவின் ஆடம்பரம்

14 ஜன, 2020 - 13:28 IST
எழுத்தின் அளவு:
Kareena-Kapoors-costly-Hand-Bag

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான சைப் அலிகான் - கரீனா கபூர், சமீபத்தில் மகன் தைமூர் அலிகான் உடன் லண்டன் சென்று திரும்பி உள்ளனர். மும்பை விமான நிலையம் வந்திருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் மீதே இருந்தது. சைப்பும், தைமூரும் கெத்தாக வர பின்னால் கரீனா கறுப்பு நிற பைஜாம், கூலிங்கிளாஸ் என ஸ்டைலாக வந்தார். குறிப்பாக இவர் கொண்டு வந்த கைப் பையை பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

பார்ப்பதற்கு சாதரணமாக தெரிந்தாலும் அந்த பையின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.13 லட்சம். உலகம் முழுக்க பிரபலமான ஹர்ம்ஸ் பெர்கின் ரக கைப்பையை அவர் வாங்கி வந்துள்ளார். இந்த பை மட்டுமல்ல, இது போன்று வேறு சில மாடல்களில் 5 கைப்பைகள் கரீனாவிடம் உள்ளன. ஒவ்வொன்றும் ரூ.8 முதல் 14 லட்சம் மதிப்பு உடையவை. மொத்தமாக இவரிடம் உள்ள கைப்பைகளின் மதிப்பு மட்டும் ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது.

ஹாலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நடிகைகள் பெரும்பாலும் ஹர்ம்ஸ் பெர்கின் ரக கைப்பையை தான் உபயோகப்படுத்துவார்கள். உலகளவில் அதிக விலை உள்ள இந்த ரக பையை வைத்திருந்தாலே அவர்கள் பெரும் செல்வந்தவர்கள் என புரிந்து கொள்ளலாம். அந்தளவு இது பணக்காரர்களின் டிரேட் மார்க்காக பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோஸ்வாமியாக நடிக்கும் அனுஷ்கா ஷர்மாகோஸ்வாமியாக நடிக்கும் அனுஷ்கா ஷர்மா தயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை  மீடூ புகார் தயாரிப்பாளர் மீது பெங்காலி நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Endrum Indian - Kolkata,இந்தியா
14 ஜன, 2020 - 15:35 Report Abuse
Endrum Indian இது ஒரு வருடம் முன்பு வந்ததாயிர்றே???யாஹூவில் தான் இந்த குழந்தையைப்பற்றி தினம் ஒரு செய்தி வருமே, காலையில் எழுந்தான், அழுதான், கையை தூக்கினான் என்று இப்படியெல்லாம் ???எப்படி??? "பணம் கொடு செய்தி போடுகின்றோம்" தொழில் தர்மம் அவர்களுடையது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in