Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடிமுறை கலையை பேசும் ‛பட்டாஸ்'

14 ஜன, 2020 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Pattas-to-speak-about-martial-arts

தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம் பட்டாஸ். ஒரு தனுசுக்கு மெஹ்ரினும், இன்னொரு தனுசுக்கு சினேகாவும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நவீன், நாசர், முனீஷ்காந்த், சதீஷ் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். வருகிற 15ந் தேதி படம் வெளிவருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் தியாகராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் தற்காப்பு வர்ம கலையாக இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டு படம் தயாராகி உள்ளது. இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் இருக்கிறது. இதில் தனுஷ் அடிமுறை கலையில் வல்லவராக நடித்திருக்கிறார். இதற்காக அவர் 6 மாதங்கள் பயிற்சி பெற்றார்.

படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் சினேகாவும் இந்த கலையை கற்றுக் கொண்டு நடித்துள்ளார். அடிமுறை கலையை பின்பற்றித்தான் கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகள் வெளிநாடுகளில் உருவானது. இந்த கலைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதை படம் வலியுறுத்துகிறது. படம் பொங்கல் விருந்தாக உலகம் முழுக்க 1,500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தர்பாரால் பாதிக்கப்பட்ட விவசாயிதர்பாரால் பாதிக்கப்பட்ட விவசாயி தர்பார் - அமெரிக்கா வசூலில் 3வது இடத்தில்... தர்பார் - அமெரிக்கா வசூலில் 3வது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in