Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீனவர் தலைவி: மீண்டும் கதையின் நாயகியாக விஜி சந்திரசேகர்

14 ஜன, 2020 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Viji-Chandrasekar-as-Fisherman-Thalaivi

தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் விஜி சந்திரசேகர், அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‛ஆரோகணம்' படத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும், கதையின் நாயகியாகவும் நடித்தார். தற்போது ‛எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்' என்ற படத்தில் மீனவர் குப்பத்து தலைவியாகவும், கதையின் நாயகியாகவும் நடித்துள்ளார்.

மீனவ மக்களுக்காக போராடும் அவரை ஒரு கும்பல் தீர்த்து கட்ட நினைக்கிறது. அவர்களுடன் போராடி மீனவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்கிற கதை. இதுகுறித்து விஜி சந்திரசேகர் கூறியதாவது:

கதையை கேட்டதுமே சம்பளம் பற்றி எதுவும் பேசாமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு முடிந்த மறுநாளே முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்கள். தொடர்ச்சியாக 14 நாட்கள் இரவு பகலாக நடித்தேன். இப்படி தொடர்ச்சியாக நான் இதுவரை நடித்ததில்லை. எனக்கு நீச்சல் தெரியாது, இருந்தாலும் நடுக்கடலில் படகு ஓட்டி துணிச்சலுடன் நடித்தேன். இந்தப் படம் என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்றார்.

இந்தப் படத்தில் கிரண், மேக்னா, ஏலன், நியா கிருஷ்ணா, தென்னவன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜாசிங் தயாரித்துள்ளார், சிவசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவ் ஓங்கார் இசை அமைத்துள்ளார். கே.எஸ்.சரவணன், அபுபக்கர் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛டகால்டி' ரிலீஸில் மாற்றமில்லை: தயாரிப்பாளர் உறுதி‛டகால்டி' ரிலீஸில் மாற்றமில்லை: ... பிளான் பண்ணி பண்ணணும்: வடிவேலு வசனம் தலைப்பானது பிளான் பண்ணி பண்ணணும்: வடிவேலு வசனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

kumaresan - Petaling Jaya,மலேஷியா
15 ஜன, 2020 - 13:09 Report Abuse
kumaresan அருமையாக நடிக்க கூடிய நடிகை. வாழ்த்துக்ககள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in