கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? |
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‛டகால்டி' மற்றும் ‛சர்வர் சுந்தரம்' படங்கள் 31ந் தேதி ஒரே நாளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது ரசிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. "நாங்கள் ஏற்கெனவே ரிலீஸ் தேதி முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து விட்டோம்" என்று டகால்டி தரப்பும், "2 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் வருகிறோம் வழிவிடுங்கள்" என்று சர்வர் சுந்தரம் தரப்பினரும் கூறிவருகிறார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் டகால்டி படம் 31ந் தேதி வெளிவருவது உறுதி என்று அதன் தயாரிப்பாளர் எஸ்.பி.சவுத்ரி கூறியுள்ளார். இவர் திருப்பூர் பகுதி திரைப்பட விநியோகஸ்தர். தனது 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பில் படத்தை தயாரித்துள்ளார்.
சந்தானம், யோகிபாபு, பெங்காலி நடிகை ரித்திகா சென், தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், இந்தி நடிகர் தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் படப்பிடிப்பு நடத்தி தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கி உள்ளார். சந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் முதல் படம்.